நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

87 ரூபாய்க்கு சொந்த வீடு! ஆனால் சென்னைக்கு மிகமிக அருகில் இத்தாலியில்!

ஒரே ஒரு யூரோ, இந்திய மதிப்பில் வெறும் ரூ.87. இவ்வளவு கொடுத்தால் போதும் இத்தாலி அரசு மக்களுக்கு சொந்தமாக வீடு வழங்கத் தயாராக இருக்கிறது.
ஒரே ஒரு யூரோ, இந்திய மதிப்பில் வெறும் ரூ.87. இவ்வளவு கொடுத்தால் போதும் சொந்த வீடு வாங்கிவிடலாம். ஐய்யோ.. இது ஏதோ ரியல் எஸ்டேட் பிசினஸ் அறைகூவல், சென்னைக்கு மிகமிக அருகில் எங்கோ கிடைக்கும் ஃப்ளாட் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்.

இது இத்தாலி அரசு மக்களுக்கு சொந்தமாக வீடு வழங்க அறிவித்துள்ள திட்டம்.

இத்தாலியின் மான்ஸா எனும் கிராமத்தைவிட்டு மக்கள் பல்வேறு காரணங்களுக்காக வெளியேறிவிட்டனர். இந்த கிராமம் மட்டுமல்லா நாட்டிலுள்ள இதுபோன்ற பல்வேறு கிராமங்களும் இப்போது வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில், வெறிச்சோடிய கிராமங்களில் மீண்டும் மக்களைக் குடியமர்த்தும் பணியில் இறங்கியுள்ளது இத்தாலி அரசு. 
இதற்காக கடந்த ஆண்டே தொடங்கப்பட்டது தான் இந்த ஒரு யூரோ வீடு திட்டம். இந்தத் திட்டத்தின் படி இப்போது விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ள மான்ஸா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் விலை இந்திய மதிப்பில் வெறும் 87 ரூபாய் தான். இந்த வீட்டை வாங்குபவர்கள் மூன்றாண்டுகளுக்குள் அங்கே ஒன்று குடிபுக வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அதை கடையாகவோ, உணவகமாகவோ பயன்படுத்த வேண்டும் அதுவரை அவர்கள் டெபாசிட் தொகையாக 5000 யூரோக்கள் கட்ட வேண்டும். புத்தாக்கப் பணிகள் முடிந்து எப்போது அவர்கள் குடிபுகுகிறார்களோ அப்போது டெபாசிட் தொகை திருப்பியளிக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. அந்த வீட்டை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்ற திட்டத்தையும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மான்ஸா நகரம் ரோம் நகரில் இருந்து 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பழங்கால கலையம்சம் கொண்ட கிராமம். இங்கு மக்களை மீண்டும் குடியமர்த்த வேண்டும் என்பதே அந்த நகர நிர்வாகத்தின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது.
இதுபோல் இத்தாலியில் நிறைய கிராமங்கள் இருந்தாலும் இத்தாலி அரசி ஒரு யூரோ திட்டத்தின் கீழ் விலைக்கு வந்துள்ள முதல் கிராமம் மான்ஸா தான்.

இத்திட்டம் குறித்து, மேயர் க்ளாடியோ ஸ்பெர்டூட்டி கூறுகையில் "மான்ஸாவில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களிடம் வீட்டைப் பற்றி விவரங்களைப் பெற்றுள்ளோம். அதை வெளிப்படைத் தன்மையுடன் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறோம்" என்று கூறினார்.

இதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விண்ணப்பங்கள் வரும் ஆக்ஸ்ட் 28 ஆம் தேதிக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் மக்கள் தொகை 60 மில்லியன். 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கின்படி அங்கு மக்கள் தொகை 60,360,383 என்று கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள்தொகை குறைவாலேயே அங்கு பல்வேறு கிராமங்களும் காலியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!