நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆண்களே! பளபளப்பான முகம், அழகான முடி வேண்டுமா..? இந்த எளிமையான 3 பயிற்சிகளை செய்யுங்கள்

 எப்போதும் இளமையாக இருக்கவும், பளபளப்பான முகத்துடன் பிட்னஸாக இருக்க வேண்டும் என்றால் சரியான உணவு முறை மற்றும் எளிமையான உடற்பயிற்சிகளை பின்பற்றினாலே போதும்.


பிட்னஸாக இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. மனதளவில் அந்த ஆசை இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் சோம்பேறித்தனம், அதனை செய்யவிடாது. இதனால், தொப்பை, முடி உதிர்தல் ஆகிய இரண்டு பிரச்சனைகளை ஆண்கள் பொதுவாக சந்திக்கிறார்கள். உட்கார்ந்த வேலை முறை, உடல் செயல்பாடு இல்லாததும் இந்தப் பிரச்சனைகளுக்கு காரணம்.

தொடக்கத்தில் இந்தப் பிரச்சனைகள் உங்களுக்கு கவலையளிக்ககூடிய வகையில் இல்லை என்றாலும், நாளடைவில் மற்ற பிரச்சனைகளுக்கான காரணகர்த்தாவாக தொப்பையும், முடி உதிர்தலும் அமைந்துவிடும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், உங்களின் முகம் மற்றும் தேக அழகு அசிங்கமாக இருக்கும். இதுவே கவலையாகவும் மாற வாய்ப்புள்ளது. எப்போதும் இளமையாக இருக்கவும், பளபளப்பான முகத்துடன் பிட்னஸாக இருக்க வேண்டும் என்றால் சரியான உணவு முறை மற்றும் எளிமையான உடற்பயிற்சிகளை பின்பற்றினாலே போதும்.

ஊட்டச்சத்து நிபுணர் ருத்ராஜ் திவாகர், ரக்ஷபந்தனையொட்டி ஆண் சகோதரர்களுக்காக 3 சூப்பரான டிப்ஸ்களைக் கொடுத்துள்ளார். தொப்பையைக் குறைத்து, பளபளப்பான முகம் மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க எளிமையான 3 பயிற்சிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த 3 பயிற்சிகளும் முடி ஆரோக்கியத்தை பாதுகாத்து, தொப்பையைக் குறைத்து பளபளப்பான முகத்தை பெறுவதற்கு உதவும்.

3 உடற்பயிற்சிகள்

1. ஸ்குவாட்ஸ்


ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சிகள் எளிமையான ஒன்று. ஆண்கள் அனைவரும் கட்டாயம் செய்யக்கூடிய ஒன்று. இந்தப் பயிற்சியை செய்யும்போது அடிவயிறு, கால் தசைப் பகுதிகளில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து அழகான உடல் அமைப்பை பெறுவதற்கும், தொப்பையை குறைப்பதற்கும் உதவுகின்றன. ஸ்குவாட்ஸ் பயிற்சிகளில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்று நாற்காலி நிலையில் அமர்தல் (Chair Punishment). கால்களுக்கு இடையில் குறிபிட்ட இடைவெளிவிட்டு நேராக நின்று கொள்ளுங்கள். பின்னர், முழங்காலை மடக்கி அந்தரத்தில் அமர்ந்த நிலையில் நிற்க வேண்டும். சில நிமிடங்கள் என்ற கணக்கில் 5 செட் வரை காலை, மாலை என இருவேளைகளிலும் செய்யலாம்.

2. டெட் லிஃப்ட்(Deadlift)

உடற்பயிற்சிக் கூடங்களில் இதற்கான கருவிகள் இருக்கின்றன. அங்கு செல்லும்போது டெட் லிஃப்ட் பயிற்சி, உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனையுடன் மேற்கொள்ளலாம். இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும்போது டெஸ்டோஸ்டெரோன் (testosterone) உள்ளிட்ட ஹார்மோன்கள் ஆண்களுக்கு சீரான சுரப்பை ஊக்குவிக்கும். மேலும், டொபமைன் சுரப்பையும் அதிகரிக்கும். டொபமைன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன்கள் சுரப்பு அதிகரிக்கும்போது முடி உதிர்தல் பிரச்சனை இருக்காது. பிட்டான உடலமைப்பு மற்றும் பளபளப்பான முகப்பொலிவையும் பெறுவீர்கள்.

3. செஸ்ட் பிரஸ் (Chest Press)

செஸ்ட் பிரஸ் என்ற நெஞ்சுக்கூடு பகுதியை விரித்தல். பெரும்பாலான ஆண்களுக்கு நெஞ்சுக்கூடு பகுதியை விரிக்கும் உடற்பயிற்சியை செய்திருப்பார்கள். இதுவரை முயற்சிக்கவில்லை என்றால் தண்டால் எனப்படும் நெஞ்சுப்பகுதியை விரிக்கும் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். இதனால், டொபமைன், டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன்கள் சுரப்பு சீரான அளவில் இருப்பது உறுதி செய்யப்படும்.

உடற்பயிற்சி செய்யும் அதேநேரத்தில் உணவுகளிலும் சரியான கவனத்தை செலுத்த வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், பொறித்த திண்பண்டங்கள், உணவுப் பொருட்களை தவிர்த்து காய்கறி, பழங்களை அதிகம் உட்கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதுவே உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!