இரவு தூக்கத்தின் போது மூன்றில் ஒரு ஆண் மற்றும் நான்கில் ஒரு பெண் குறட்டை விடுவதாக ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒருவர் தூங்கும் போது எப்போதுமே குறைட்டை விட்டு கொண்டிருப்பது அவரது தூக்கத்தின் தரத்தை அது பாதிக்க செய்யும். பகல்நேர சோர்வு, எரிச்சல் மற்றும் பல உடல்நல பிரச்சனைக்ளுக்கு காரணமாக அமைகிறது குறட்டை பழக்கம். உடல் பருமன் குறட்டைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று. அதே போல ஒழுங்கற்ற சுவாசத்துடன் குறட்டை விடுவது இதய நோய் அபாயத்தின் அறிகுறியாகும். பல வீடுகளில் தம்பதியரில் ஒருவர் குறட்டை பழக்கம் கொண்டிருப்பதால் அவரது துணையின் இரவு தூக்கமும் சேர்ந்து கேள்விகுறியாகி விடுகிறது.
வெளிநாடுகளில் குறட்டை பஞ்சாயத்தால் பிரிந்து போன தம்பதிகளின் கதை ஏராளம். ஒருவேளை உங்கள் வாழ்கை துணை குறட்டை பழக்கம் கொண்டவராக இருப்பின் அது நிச்சயம் உங்களுக்கும் சிரமத்தையே ஏற்படுத்தும். குறட்டை விடுபவருடன் ஒரே ரூமில் தூங்குவது என்பது மிகவும் எரிச்சலளிக்க கூடியதாகவும் . அதற்காக தம்பதியர் இருவரும் தனித்தனி ரூம்களில் தூங்குவது குறட்டைக்கான தீர்வு அல்ல. இரவு தூக்கத்தின் போது மூன்றில் ஒரு ஆண் மற்றும் நான்கில் ஒரு பெண் குறட்டை விடுவதாக ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன. குறட்டை பிரச்சனைக்கு இயற்கையில் கிடைக்கும் சில தீர்வுகள் பற்றி பார்க்கலாம். உடல் பருமன் அல்லது அதிக எடை:
உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது கூடுதல் எடை அதிகரித்த பிறகு குறட்டை பழக்கம் ஏற்பட்டவர்கள் தங்களது உடல் எடையில் சில கிலோவை இழப்பதால் இந்த பிரச்சனைக்கு எளிய முறையில் தீர்வு காணலாம். பெரும்பாலும் உடல் பருமன் கொண்டவர்கள் தங்களது கழுத்து பகுதியில் அதிக திசு மற்றும் கொழுப்பை கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களின் சுவாச பாதை அளவு குறைந்து பாதிக்கப்படலாம். எடை குறைப்பு குறட்டை பழக்கத்தை போக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆய்வின் படி அளவுக்கு அதிகமான உடல் எடையை இழப்பது குறட்டை பழக்கத்தை முற்றிலும் சரி செய்து விடும்.
நிமிர்ந்த நிலையில் படுத்து தூங்கும் போது குறட்டை அதிகமாக வரும் வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் நிமிர்ந்த நிலையில் படுத்து தூங்கும் போது காற்றுப்பாதையைச் சுற்றியுள்ள திசுக்கள் ஈர்ப்பு விசையால் கீழே இழுக்கப்பட்டு, குறுகலாகிறது. எனவே இது குறட்டையை ஏற்படுத்துகிறது. எனவே நேராக நிமிர்ந்தோ அல்லது குப்புற படுக்காமல் ஒருபக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்குவது குறட்டையின் தீவிரத்தை குறைக்கிறது.
ஒருக்களித்து படுத்த பின்னரும் குறட்டை பிரச்னை தீரவில்லை என்றால் தலையை வழக்கத்தை விட சற்று அதிக உயரத்தில் வைத்து படுக்கலாம். இதனால் சுவாசம் எளிதாகும் சுவாச பாதை சீராக இருக்கும். இதற்காக நீங்கள் ஒரு தலையணைக்கு பதிலாக 2 தலையணைகளை பயன்படுத்தலாம்.
எப்போதும் உடலை நீரேற்றமுடன் வைத்து கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் குறட்டை சிக்கலையும் சேர்த்து தான். உடலில் நீர்ச்சத்து குறையும் போது மூக்கு பகுதியில் சில இயல்பற்ற மாற்றங்கள் ஏற்படும். இதனால் காற்றின் சரியான ஓட்டம் தடைப்பட்டு குறட்டை ஏற்படும். எனவே உடல்நலத்துடன் நல்ல தூக்க தரத்தை பராமரிக்க ஆண்கள் தினசரி குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீரும், பெண்கள் குறைந்தது தினசரி 2-3 லிட்டர் தண்ணீரும் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
oedema மற்றும் மேல் காற்றுப்பாதை வீக்கம் காரணமாக புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு குறட்டை ஏற்படலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அதே போல மதுப்பழக்கம் காற்றுப்பாதையைச் சுற்றியுள்ள தசைகளை தளர்த்தும். எனவே குறட்டை பிரச்னை ஏற்படும். ஒருவேளை புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் கொண்டவராக இருப்பின் குறட்டை பிரச்னை தீர படுக்கைக்கு செல்லும் சில மணிநேரங்களில் இவை இரண்டையும் தவிர்த்து விடுவது தீர்வை தரலாம்.
Comments
Post a Comment