நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆதரவற்ற குட்டி யானைக்கு தாயாக மாறிய காப்பாளர் - பாசத்தை வெளிப்படுத்தும் வைரல் வீடியோ!

 இந்த அபிமான வீடியோ குறித்து பலர் நிறைய கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு ட்விட்டர் யூசர், "பச்சை கோட்டுகளில் உள்ள அழகான காவலர்கள் என் இதயத்தை மகிழ்வித்தனர். அவர் யானைக்கு தடவி விடுவது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இதற்கு நன்றி, ”என்று எழுதியிருந்தார்.


மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பாச பிணைப்பைக் காட்டும் வீடியோக்கள் பெரும்பாலும் மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. அதுபோன்ற வீடியோக்கள் பல தற்போது இணையத்திலும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ பார்ப்பவர்களின் மனதை உருக வைத்துள்ளது. அந்த வீடியோவில் ஆதரவற்ற குட்டி யானைக்கு ஒரு தாயை போல காப்பாளர் ஒருவர் செயல்படுவதை காணலாம். காப்பாளரை பாசத்தோடு அணுகும் அந்த குட்டி யானையை கண்டால் நம் கண்களில் நீர் பொங்கும்.

இது தொடர்பான வீடியோ கிளிப்பை ஷெல்ட்ரிக் வைல்ட்லைஃப் என்ற அமைப்பு தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது. மேலும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்ததாவது "வாடகை தாய் மார்களாக செயல்படுவது, தாய் மற்றும் குடும்பத்தை இழந்து அனாதையான யானைகளுக்கு உதவும் வழிகளில் ஒன்றாகும். எனவே அவர்கள் ஒரு நாள் காட்டுக்குத் திரும்பலாம், ”என்று வீடியோவுடன் பகிர்ந்திருந்தனர். மேலும் அந்த பதிவில் இதுபோன்ற ஆதரவற்ற யானைகளை தத்தெடுக்க மக்களை அழைக்கும் இணைப்பையும் அந்த அமைப்பு சேர்த்துள்ளது.

இந்த அமைப்பு கென்யாவில் அமைந்துள்ள ஷெல்ட்ரிக் காப்பகத்தை நடத்தி வருகிறது. தனித்துவிடப்பட்ட யானைகளுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி வருகிறது. அந்த வீடியோவில், காப்பாளர் குட்டி யானையை தனது கைகளால் வருடி விடுகிறார். குட்டி யானையும், தனது தாயாய் போல அவரை நினைத்து தனது தும்பிக்கையால் அவரை வருடுகிறது. பார்ப்பதற்கு நாமும் அந்த யானையை கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

இந்த வீடியோ, இணையத்தில் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே 5,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் 1,200-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் ஷேர்களையும் இது குவித்துள்ளது. இந்த அபிமான வீடியோ குறித்து பலர் நிறைய கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு ட்விட்டர் யூசர், "பச்சை கோட்டுகளில் உள்ள அழகான காவலர்கள் என் இதயத்தை மகிழ்வித்தனர். அவர் யானைக்கு தடவி விடுவது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

இதற்கு நன்றி, ”என்று எழுதியிருந்தார். "அது மிகவும் அழகாக இருக்கிறது," என்று இன்னொருவர் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று மூன்றில் ஒரு பங்கு மக்கள் கமெண்ட் செய்திருந்தனர். இதேபோல, கென்யாவில் மற்றொரு குட்டி யானையின் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. ஷெல்ட்ரிக் காப்பகத்தில், பிறந்து 24 மணி நேரம் கூட ஆகாத குட்டி யானை ஒன்று அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் குடிக்க வந்து அதில் சிக்கிக் கொண்டது.
அடுத்து, சில மணி நேரங்களில் அதனை தேடிக் கொண்டு தாயும் மற்ற உறவினர்களும் அந்த குட்டி தொட்டியை சூழ்ந்து அந்த குட்டியை பத்திரமாக மீட்டுள்ளது. இந்த வீடியோவை தற்போது வைரலாக பரவி வருகிறது. சமீபகாலமாகவே, யானைகள் செய்யும் குறும்புதனமான வீடியோக்கள் பல இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!