நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

என்னது “க்யூட் கோப்ராக்களா”? வர்ணனைக்கும் ஒரு வரையறை வேண்டாமா? வைரலாகும் பாம்புக் குட்டிகளின் வீடியோ

 அந்த வீடியோவை தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 

இந்திய ஐ.எஃப்.எஸ். அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தன்னார்வலர் ஒருவரால் மீட்டெடுக்கப்பட்ட பாம்பு முட்டைகளில் இருந்து, 50 நாட்கள் கழித்து, பாம்புகள் வெளியே வரும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. அதனை அவர் க்யூட் கோப்ராக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் மிகவும் விசம் கொண்ட நாகங்களில் ஒன்றான மோனக்ளாட் நாகங்கள் (Monocled snakes) ஆகும். 1.4 மீட்டர் நீளம் வரை வளரும் இந்த நாகங்களின் இளம் குட்டிகளில் இருக்கும் விசம் வளர்ந்த நாகங்களில் இருக்கும் விசத்தை விட மிகவும் அதிகமாக இருக்கும்.

watch video

அந்த வீடியோவை தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 


also read : சிறுநீரகக் கல், பிளட் சுகர், சளிக் காய்ச்சல்… நாம் மறந்து போன காணம் இவ்ளோ பிரச்னைக்கு தீர்வு!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!