நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இதை சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்

 ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் நீண்ட ஆயுள் ஒன்றும் கிடைக்காத வரம் அல்ல. இதை நிரூபிக்கிறது நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஒன்று.


ஒருவரை வாழ்த்தும்போது நீண்ட ஆயுளுடன் வாழ்க என்றும், வாழ்க வளமுடன் என்றும் வாழ்த்துவது நமது தொன்மையான மரபு. ஆனால் வாழ்த்துவதும், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான விருப்பத்தை நமது உடல் தான் தீர்மானிக்கிறது. ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் நீண்ட ஆயுள் ஒன்றும் கிடைக்காத வரம் அல்ல.

இதை நிரூபிக்கிறது நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஒன்று. வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அக்ரூட் பருப்புகளை சாப்பிடுபவர்களுக்கு இறப்பு அபாயம் குறைவதாகவும், ஆயுட்காலத்தை நீட்டிப்பதில் அக்ரூட் எனப்படும் வாதுமைக் கொட்டை முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.  

வாதுமையை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில் அதை தொடர்ந்து சாப்பிடுபவர்களின் ஆயுட்காலம் அதிகமாக உள்ளது.  வாரத்திற்கு ஒரு சில அக்ரூட் பருப்புகள் கூட ஆயுளை அதிகரிக்கிறது. குறிப்பாக தரமான உணவு உண்ணாதவர்களுக்கும் இது பொருந்துகிறது என்று ஆய்வு கூறுகிறது.

வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அக்ரூட் கொட்டையை சாப்பிடுபவர்களுக்கு பொதுவாக மரண அபாயம் 14 சதவிகிதம் குறைகிறது, அதேபோல் இருதய நோய்களால் (cardiovascular diseases) இறக்கும் அபாயம் 25 சதவிகிதம் குறைகிறது என்று கூறும் இந்த ஆராய்ச்சி, மேலும் சுமார் ஆயுட்காலத்தை 1.3 வருடங்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கிறது.

இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் 67,014 செவிலியர்களின் உடல்நலனை கண்காணித்தார்கள். இந்த ஆய்வு சுமார் 20 ஆண்டுகள் (1998-2018) கண்காணிப்பில் நடைபெற்றுள்ளது.. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உணவு உட்கொள்ளல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்கள் ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளல் குறித்து தகவல்களை தொடர்ந்து கொடுத்து வந்தனர். இதில், வாதம் கொட்டை, பிற கொட்டை வகைகள் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை உட்கொண்டனர், அத்துடன் உடற்பயிற்சி மற்றும் புகைபிடிக்கும் நிலை போன்ற வாழ்க்கை முறை காரணிகளும் தரவுகளில் சேர்க்கப்பட்டன.

இந்தத் தரவுகளின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நிலைகளில் வால்நட் நுகர்வு மற்றும் நீண்ட ஆயுள் தொடர்பான பல்வேறு சுகாதார குறிகாட்டிகளுக்கு இடையேயான தொடர்புகளை அடையாளம் கண்டறிந்தனர்.


சரி அப்படி என்ன தான் இருக்கிறது இந்த வாதுமைக் கொட்டையில்?


அக்ரூட் என்னும் வாதுமையில் கீழ்கண்ட சத்துக்கள் உள்ளன:

வாதுமைப் பருப்பில் 4% நீர், 15% புரதம், 65% கொழுப்பு, 14% கார்போவைதரேட்டு மற்றும் 7% நார்சத்து உள்ளது.

100 கிராம் வாதுமைப் பருப்பில் 2740 கிலோயூல்களையும் மாங்கனீசு உட்பர பல உயிர்ச் சத்துக்கள் நிறைந்துள்ளது.  

வாதுமையில் மோனோ, பால்அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் உயர்ந்த உள்ளடக்கம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு முக்கியமான ஊட்டசத்தாகும். வாதுமையில் உள்ள  டிஎச்ஏ எனும் ஒமேகா 3-வகை அமிலமானது மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதிலுள்ள நார்சத்து, செலினியம் , வைட்டமின் பி7 ஆகிய சத்துகள் முடி உதிர்வை குறைக்கின்றன. 

வாதுமையில் வைட்டமின், தாது சத்துகள் அதிக அளவில் உள்ளன. வாதுமையில் உள்ள நல்ல கொழுப்புகள் கெட்ட கொழுப்புகளை குறைக்கும்.



ALSO READ : Black Water: விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை லிட்டர் 4000 ரூபாய்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!