Black Water: விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை லிட்டர் 4000 ரூபாய்!
- Get link
- X
- Other Apps
விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் ஒரு லிட்டர் விலை 3000 முதல் 4000 ரூபாய் தெரியுமா? அப்படி என்ன அதிசயத் தண்ணீர் அது?
உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக கோஹ்லி தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறார், தனது உணவில் பல மாற்றங்களை செய்கிறார்.
அவர் மேற்கொள்ளும் மாற்றங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு மட்டுமல்ல. வேறு சில அடிப்படைவிஷயங்களிலும் கோஹ்லி மாற்றம் செய்திருக்கிறார்.
குடிக்கும் தண்ணீரிலும் விராட் மாற்றம் செய்துவிட்டார்! விராட் குடிக்கும் ‘பிளாக் வாட்டர்’('Black Water') விலை லிட்டருக்கு கிட்டத்தட்ட 3000-4000 ரூபாய். இந்த நீர் இயற்கையான-கருப்பு கார நீர் (natural-black alkaline water) ஆகும். இது உடலில் நீர்சத்து தங்கியிருக்க உதவுகிறது. 'பிளாக் வாட்டர்'-இல் pH அதிகமாக உள்ளது.
கோவிட் பாதிப்பு தொடங்கிய பிரகு, விராட் கோலி, ஊர்வசி ரவுடேலா உட்பட பல பிரபலங்கள், தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் ஆரோக்கியமாகவும் இருக்கவும் 'பிளாக் வாட்டர்' க்கு மாறினார்கள்.
இந்த தண்ணீர் சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது, எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும், அதோடு மனச்சோர்வைக் குறைக்கவும் உதவுகிறது என்று கூறப்படுகிறது.
கோஹ்லி எப்போதும் தனது வாழ்க்கையில் சிறந்தவற்றுக்காக பாடுபடுவதை நாம் அறிவோம், அவருடைய வாழ்க்கையில் அவர் எடுக்கும் தேர்வுகள் இந்த உண்மைக்கு ஒரு சாட்சியாகும். கோஹ்லி சிறந்த தரமான தண்ணீரை உட்கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஒருவர், தன் உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளாவிட்டால், சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது. இதுவே, அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டாலும் சிறுநீர்ப் பை பழுதாக நேரலாம்.
நாம் தினசரி குடிக்கும் தண்ணீரின் அளவு நமது உடல் இயக்கத்துக்குப் போதுமானதாக இருக்கவேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் செலுத்தும் அக்கறையை குடிக்கும் தண்ணீரின் மீதும் வைக்க வேண்டும்.
உடலில் அனைத்து செல்களின் முக்கிய அங்கமாக நீர் உள்ளது. உணவு மற்றும் கழிவுப்பொருள்களைக் கடத்த உதவுகிறது. உடலில் வேதியல் மாற்றங்கள் நடைபெறுதலுக்கான முக்கிய ஆதாரமும் உடலில் உள்ள நீர் தான்.
என்சைம்கள், ஹார்மோன்கள், வைட்டமின்கள், எலக்டிரோலைட்டுகளை கரைக்கும் கரைப்பானாக செயல்படும் தண்ணீர், உடல் வெப்பத்தைப் பாதுகாப்பதிலும், திசுக்களின் அமைப்பை உறுதி செய்வதிலும் பெரும் பங்காற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ : ட்ரோன்கள் மூலம் பீட்சா டெலிவரி செய்யும் நாடு எது தெரியுமா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment