நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கழிவுகளில் உருவான ‘உலக அதிசயங்கள்’

 டெல்லிக்கு சுற்றுலா செல்பவர்கள் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் ‘7 உலக அதிசயங்கள்’ இடம் பிடித்துள்ளன. இந்த உலக அதிசயங்கள் அனைத்தும் பிளாஸ்டிக், இரும்பு, எலக்ட்ரானிக் உள்ளிட்ட கழிவு பொருட்களால் தயாரானவை. அதனால் இதற்கு ‘வேஸ்டு டூ வொன்டர்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.


தெற்கு டெல்லி மாநகராட்சி சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‘வேஸ்டு டூ வொன்டர் தீம் பார்க்’ நிஜாமுதீன் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் அமைந்திருக்கிறது. இந்த தீம் பார்க் உருவாக்கத்திற்கு சுமார் 150 டன் கழிவு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 கலைஞர்கள், 7 துணை கலைஞர்கள், 70 வெல்டர்கள் மற்றும் ஏராளமான உதவியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்குள்ள உலக அதிசயங்களின் உருவாக்கம் பற்றிய தொகுப்பு இது.


1. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை:

கழிவு பொருட்கள்: சுமார் 7-8 டன்

உயரம்: 35 அடி

இதன் பீடம் செங்கற்களின் தோற்றத்தில் காட்சியளித்தாலும் அதனை உருவாக்குவதற்கு பழைய பைப்புகள், உலோக துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திர தேவியின் தலையை அலங்கரித்திருக்கும் கிரீடம் கார் ரிம்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தேவியின் வலது கையில் இடம்பெற்றிருக்கும் சுடர் ஜோதி, பழைய பைக் மற்றும் செயினால் ஆனது. தலைமுடி சுருளையும் பைக் செயின்தான் அலங்கரித்திருக்கிறது.

2. பிரேசிலின் கிறிஸ்து மீட்பர்:

கழிவு பொருட்கள்: 4-5 டன்

உயரம்: சுமார் 25 அடி

பீடம் செய்வதற்கு பூங்காக்களில் நிறுவப்படும் பழைய பெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பீடத்தின் மீது செங்குத்தாக மின் கம்பங்கள் நிறுவப்பட்டு சிலை உருவாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக் கிளின் என்ஜின் பகுதி கைகள் உருவாக்குவதற்கும், செயின் தலைமுடி வடிவமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

3. பாரீஸ் ஈபிள் டவர்:

கழிவு பொருட்கள்: 40 டன்

உயரம்: 60 அடி

இதன் உயரம் ஆட்டோமொபைல் கழிவு பொருட்களால் உருவானது. லாரிகளின் உதிரி பாகங்கள், கிளட்ச் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேல்புற மாடி பகுதிகள் கிரேன் உதவியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

4. தாஜ்மஹால்:

கழிவு பொருட்கள்: சுமார் 30 டன்

உயரம்: 20 அடி

தாஜ்மஹாலின் இந்த அழகிய அமைப்புக்கு 1600 சைக்கிள் வளையங்கள், மின் கம்ப குழாய்கள், பூங்கா பெஞ்சுகள், ஊஞ்சல், லாரி ஸ்பிரிங்ஸ் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு குழாய்களைப் பயன்படுத்தி குவிமாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெஞ்சுகளை பயன்படுத்தி ஜன்னல், கதவு சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

5. ரோம் கொலோசியம்:

கழிவு பொருட்கள்: 11 டன்

உயரம்: 15 அடி

மின்சார கம்பங்கள், உலோக தளவாடங்கள், பெஞ்ச், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், கார் சக்கரங்கள் பயன்படுத்தி இந்த கொலோசியம் உருவாக்கப்பட்டுள்ளது.

6. சாய்ந்த கோபுரம்:

கழிவு பொருட்கள்: 10.5 டன்

உயர: 25 அடி

8 மாடிகளை கொண்ட சாய்ந்த கோபுரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 211 ஆர்ச்சுகள் இடம்பெற்றிருக்கிறது. பிளாஸ்டிக் குழாய்கள், சைக்கிள் சக்கரங்கள், மெட்டல் ஷீட்டுகள் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.

7. பிரமிடு:

கழிவு பொருட்கள்: சுமார் 10-12 டன்

உயரம்: சுமார் 18 அடி

உலகின் ஏழு அதிசயங்களில் மிகப்பழமையான இது 10,800 வளைந்த தகடுகளை பயன்படுத்தி 110 அடுக்குகளாக உருவாக்கப்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!