நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்கள் உதடு கருப்பாக இருப்பதற்கு இது தான் காரணம்.. இனி இதை செய்யாதீங்க..

முகத்தின் அழகிற்கு முக்கிய பங்கு வகிக்கும் உதட்டை பராமரிப்பது அவசியம்.சிலருக்கு முகம் மிகவும் பளிச்சென இருக்கும், ஆனால் உதட்டில் வெடிப்பு அல்லது கருப்பு படிந்திருக்கும்.அப்படி உதடு கருப்பாக மாறுவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா ?
போதுமான ஈரப்பதம் இல்லை :

சுறுசுறுப்பான உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியமானது.அதே போல் உதடுகளுக்கும் தண்ணீர் அவசியம்.உதடுகளுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் என்றால் லிப் பாம் தான். உதடுகளை எப்போது ஹைட்ரேட் செய்வது முக்கியம். வறட்சியான உதடுகள் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.அவற்றை தவிர்க்க ஷியா எண்ணெய், கோகோ எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இறந்த செல்களை அகற்றுவதில்லை :

உதடுகளின் வெளிபுறமானது ஈரப்பதத்தை எளிதில் இழக்க செய்கிறது.இதனால் உதட்டில் வெடிப்பு உண்டாகிறது. சருமத்தில் இறந்த செல்களை நீக்குவது போல உதட்டிலும் இறந்த செல்களை நீக்க வேண்டும்.அதற்கு வாரம் இரண்டு முறை உதடுகளை எக்ஸ்ஃபோலியேட் செய்யுங்கள்.அதாவது உதடுகளுக்கு என்று பிரத்யேகமாக ஸ்க்ரப் ( scrub )உள்ளது. அது உதட்டிலிருந்து இறந்த செல்களை நீக்கும்.
புகைப்பழக்கம் :

உதடுகள் கருப்பாக மாறுவதற்கு முக்கியமான காரணம் புகைப்பிடித்தல் .புகையை உள் இழுக்கும் போது அதில் இருக்கும் நிகோடின் மற்றும் தார் உதடுகள் கருப்பாக காரணமாக இருக்கின்றன. எனவே புகைப்பழக்கத்தை தவிர்த்தல் நல்லது.
உதடுகளை பராமரிப்பது இல்லை :

உதடுகளை பராமரிக்க இரவு தூங்குவதற்கு முன்பு வழக்கமாக்கி கொள்ளுங்கள்.நீங்கள் அதிகம் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர் என்றால், உதடுகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.உதடுகளை பற்களால் கடிக்காதீர்கள். கைகளால் உதடுகளை அடிக்கடி தொட வேண்டாம். ஆர்கானிக் பொருட்களை நீங்கள் விரும்புவீர்கள் என்றால் ரோஸ் ஆயில், ஆரஞ்சு ஆயில், லெமன் ஆயில்,வைட்டமின் இ, மிண்ட் ஆயில், கிளிசரீன் ( Glycerine)கொண்ட லிப் சீரத்தை ( lip serum) ஒரு நாளைக்கு மூன்று முறை பயன்படுத்தலாம். அல்லது வீட்டில் இருக்கும் பாதாம் எண்ணெய்யை இரவு தூங்கும் முன்பு நன்கு மசாஜ் செய்துவிட்டு தூங்கினால் இரத்த ஓட்டத்தை சீராக்கும். அழகான கவர்ச்சியான ரோஸி லிப்ஸை நீங்கள் பெறலாம்.

ஒருவரின் முகத்தை பார்த்து பேசுகையில் கண்கள் மற்றும் உதடுகளை பார்த்து பேசுவது வழக்கம்.முகத்தின் அழகிற்கு முக்கிய பங்கு வகிக்கும் உதட்டை பராமரிப்பது அவசியம்.சிலருக்கு முகம் மிகவும் பளிச்சென இருக்கும், ஆனால் உதட்டில் வெடிப்பு அல்லது கருப்பு படிந்திருக்கும்.அப்படி உதடு கருப்பாக மாறுவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா ? நீங்கள் பின்பற்றும் இந்த பழக்கத்தினால் தான் உங்கள் உதடு கருப்பாக மாறுகிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!