மனைவியும்.. மகிழ்ச்சியும்..
- Get link
- X
- Other Apps
மகிழ்ச்சியான வாழ்க்கை துணையுடன் பயணிப்பது நீண்ட கால திருமண பந்தத்தில் இணைந்திருக்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும்.
மகிழ்ச்சியான வாழ்க்கைத் துணை அமைந்தால் அவர் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, துணையின் ஆரோக்கியத்திலும், ஆயுளிலும் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுதொடர்பாக சைக்காலஜிகல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், “மகிழ்ச்சியான வாழ்க்கை துணையுடன் பயணிப்பது நீண்ட கால திருமண பந்தத்தில் இணைந்திருக்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 4,400 தம்பதிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். உடல் ரீதியான செயல்பாடுகள், உடல் நலம், பாலினம், வயது, கல்வி, வருவாய், வாழ்க்கை திருப்தி உள்பட பல விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆய்வு செய்ததில் 16 சதவீதம் பேர் இறந்திருக்கிறார்கள். வயது முதிர்வு, குறைந்த பொருளாதார நிலை, குறைந்த உடல் உழைப்பு, மோசமான உடல் ஆரோக்கியம் போன்றவை இறப்புக்கு காரணமாக இருந்திருக்கின்றன. உறவில் திருப்தி இல்லாத நிலை, வாழ்க்கையில் திருப்தியின்மை போன்ற காரணங்களும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இதன் மூலம் மகிழ்ச்சியான துணை இருந்தால் இறப்பும் தள்ளிப்போகும், ஆயுள் கூடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ALSO READ : கிரீன் டீ தரும் சரும அழகு
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment