நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆரோக்கியமான சருமத்தை பெற இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்கள்..

 நீங்கள் தினமும் உங்கள் சரும பராமரிப்பை செய்து வந்தாலே அழகான சருமத்தை பெற முடியும்.


அழகான சருமத்தை பெற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் தூசி, மாசு, உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக சருமத்தில் பருக்கள், எண்ணெய் பசை, ப்ளாக்கெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய கடைகளில் கிடைக்கும் க்ரீம்கள், பேஸ்வாஷ், ஸ்க்ரப் ஆகியவற்றை சரியான முறையில் பயன்படுத்தாததால் சருமத்தில் மேலும் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்கள் தினமும் உங்கள் சரும பராமரிப்பை செய்து வந்தாலே அழகான சருமத்தை பெற முடியும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

கிளன்சிங் :ஆரோக்கியமான சருமத்திற்கான முக்கிய விஷயம் சருமத்தை சுத்தம் செய்வது தான். கிளன்சிங் செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய், மேக்கப், மற்றும் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குகிறது. மேலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ளவும் உதவுகிறது. தினமும் காலை, இரவிலும் சருமத்தை சுத்தம் செய்வது அவசியம். உங்கள் சருமத்திற்கு ஏற்ற கிளன்சர்களை வாங்கி பயன்டுத்துங்கள்.

நிறைய தண்ணீர் குடிக்கவும் :உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க தண்ணீர் இன்றியமையாதது. உங்கள் சரும பொலிவை இயற்கையான முறையில் பராமரிக்க ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் உங்கள் சருமம் நீண்ட காலம் இளமையாக காட்சியளிக்கும்.

எக்ஸ்ஃபோலியேட் : எக்ஸ்ஃபோலியேட் சரும பராமரிப்பின் முக்கிய விஷயம் ஆகும். இதற்கு நாம் ஆவி பிடிக்கலாம். ஆவி பிடிப்பது உங்கள் சருமத்தில் அற்புதங்களைச் செய்கிறது. இது சருமத்தின் வெளிப்புற அடுக்குகளில் இருந்து இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. இதனால் உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவது மட்டுமின்றி, இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. வாரம் ஒரு முறை ஆவி பிடிப்பது நல்லது. இதனால் உங்கள் சருமம் பிரகாசமாகும். ஆவி பிடிக்க துளசி இலைகள், எலுமிச்சை அல்லது AHA சீரம்போன்றவற்றை கூட பயன்படுத்தலாம். உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி அழகான சருமத்தை பெற வாரத்திற்கு இரண்டு முறை எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும்.

சன்ஸ்க்ரீன் :சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது ஆரோக்கியமான சருமத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இது சூரியனின் UVA மற்றும் UVB கதிர்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்திலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. உங்கள் சருமத்தை நன்கு சுத்தம் செய்த பின்னர், மேக்கப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு நல்ல சன்ஸ்கிரீன் பயன்படுத்தப்படலாம். இந்தியாவில் சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு 4 முதல் 5 மணி நேரத்திற்கும் ஒரு முறை சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். அதிக கெமிக்கல்கள் இல்லாதவற்றை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

சீரம் :பெண்களிடையே சீரம் பயன்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஒரு சிறந்த சீரம் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும், பொலிவான சருமத்தை பெறவும் உதவுகிறது. ஆனால் சருமத்தின் தேவைக்கேற்ப சீரம் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் சருமத்தை சுத்தப்படுத்திய பின்னர் தான் சீரம் பயன்படுத்த வேண்டும். ஹைலூரோனிக் அமிலம், நியாசினமைடு கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஹைலூரோனிக் அமிலம் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் நியாசினமைடு ஈரப்பதத்தைத் தக்கவைத்து அழகான சருமத்தை பெற உதவுகிறது. இதனை காலை, அல்லது இரவு தூங்கும் முன்னர் பயன்படுத்தலாம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!