நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பூரி சுட இனி எண்ணெய் வேண்டாம்...தண்ணீரிலேயே புஸ்ஸுனு பூரி சுடலாம்.. எப்படி தெரியுமா..?

 எண்ணெய் உணவு என்பதால் அது அவ்வளவு ஆரோக்கியமும் இல்லை. ருசிக்காக சாப்பிடலாம் அவ்வளவுதான். அது சில நேரங்களில் செரிக்காது. எனவே அப்படியெல்லாம் இனி ருசிக்காக சாப்பிட்டு கஷடப்பட வேண்டாம்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பூரியை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் எண்ணெய் உணவு என்பதால் அது அவ்வளவு ஆரோக்கியமும் இல்லை. ருசிக்காக சாப்பிடலாம் அவ்வளவுதான். அது சில நேரங்களில் செரிக்காது. எனவே அப்படியெல்லாம் இனி ருசிக்காக சாப்பிட்டு கஷடப்பட வேண்டாம். அதே சுவையில் பூரியை எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுட்டு சாப்பிடலாம். எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்
எண்ணெய் – 1 tsp
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் - தே.அ


செய்முறை :

கோதுமை மாவு , உப்பு சேர்த்து பூரிக்கு மாவு பிசைவது போல் பிசைந்துகொள்ளுங்கள். அதில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து பிசைந்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக அதை பூரிக்கு ஏற்ப வட்ட வடிவில் உருட்டிக்கொள்ளுங்கள். அவ்வாறு அனைத்து மாவையும் பிசைந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து பூரிக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

தண்ணீர் கொதிநிலையை அடையும்போது ஒரு பூரி மாவை போடுங்கள்.

அது ஒருபுறம் வெந்ததும் மேலே எழும்பி வரும் அடுத்த பக்கமும் திருப்பிப் போடுங்கள். மாவு வெந்ததும் அதை எடுத்துவிடுங்கள்.

அப்படி ஒவ்வொன்றாக சுட்டு எடுத்ததும் அவற்றை இட்லி குக்கர் வைத்து அதற்குள் தட்டு வையுங்கள். இல்லையெனில் கடாய்க்குள் தட்டு வைத்து அதில் பூரியை அடுக்கி சூடேற்ற பூரி புஸ்ஸுனு பொங்கி வரும். அவ்வளவுதான் அதை எடுத்து சாப்பிடலாம்.

அவ்வளவுதான் எண்ணெய் இல்லாமல் புஸ் புஸ் பூரி தயார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்