பல விஞ்ஞானிகள் இதைப்பற்றி பல தரப்புகளிலிருந்து ஆய்வு செய்தனர். பொதுவக கொசுக்கள் அனைத்து காலநிலைகளிலும் வாழக்கூடிய பூச்சியாகும். குறிப்பாக குளிர்கால நிலைகளிலும் அவைகளால் இனப்பெருக்கம் செய்ய முடியும்.
கொசுக்கடி வாங்கியவர்களுக்குத்தான் தெரியும் அது எவ்வளவுக் கொடூரமான பூச்சி என..இந்தக் கொசுக்கடியால் பலர் இரவுத் தூக்கத்தைக் கூட நிம்மதியில்லாமல் கழித்திருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த சமயத்தில் தோன்றும் ஒரே விஷயம் கொசுவே இல்லாத நாட்டுக்கு போய்விட்டால் எப்படி இருக்கும்..? அப்படி ஒரு நாடு இருந்தால் நான் தான் முதலில் போவேன் என்பதுதான். உங்கள் எண்ணம்போல் அப்படி ஒரு நாடு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..? ஆம்..அது வேறெங்கும் இல்லை ஐஸ்லாந்து தான்..! இதுதான் கொசுவே இல்லாத ஒரே நாடு.
பல விஞ்ஞானிகள் இதைப்பற்றி பல தரப்புகளிலிருந்து ஆய்வு செய்தனர். பொதுவக கொசுக்கள் அனைத்து காலநிலைகளிலும் வாழக்கூடிய பூச்சியாகும். குறிப்பாக குளிர்கால நிலைகளிலும் அவைகளால் இனப்பெருக்கம் செய்ய முடியும். அப்படி அவை அதிக குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் கூட இருக்கின்றன. ஆனால் ஐஸ்லாந்தில் மட்டும் ஏன் வாழ முடியவில்லை என்பது விஞ்ஞானிகளின் பெருங்குழப்பமாக இருந்தது.
கொசு பொதுவாக தண்ணீரில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. ஆனால் ஐஸ்லாந்தை பொருத்தவரை மூன்று முறை மிகப்பெரிய உறைபனி காலத்தை உருவாக்குகிறது. இது அவைகளுக்கு வாழவும் , முட்டை இடவும் சிறந்த இடமாக இல்லாமல் இருக்கலாம் என கருதுகின்றனர். அதுமட்டுமன்றி ஐஸ்லாந்தின் மண் மற்றும் நீரின் இரசாயன கலவை கூட காரணமாக இருக்கலாம் என்கிறது. அதனால்தான் கொசுக்களால் முட்டையிட்டு அடைகாத்து இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை, அதனாலும் அவைகளால் இங்கு வாழ இயலாமல் போகலாம் என்கிறார்கள்.
ஐஸ்லாந்து நாட்டின் தலைநகரம் ரெய்காஜ்விக். 60% ஐஸ்லாந்தர்கள் இங்குதான் வாழ்கிறார்கள். இங்கு பல கஃபேக்கள், பார்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உள்ளன. குறிப்பாக உலக வரைபடத்தில் மனிதர்கள் குடியேறிய கடைசி இடம் ஐஸ்லாந்து என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த பூமியின் இளம் நிலப்பரப்பு என்றும் கூறப்படுகிறது. 1100 வருடங்களுக்கு முன் வைக்கிங் மக்கள் தற்காலிகமாக வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. ஐஸ்லாந்து மார்ச் முதல் செப்டம்பர் வரை இயற்கை எழில் கொஞ்சும் கால நிலையாக இருப்பதால் சுற்றுலாவாசிகள் அந்த சமயத்தில் ஐஸ்லாந்து செல்வது சிறப்பாக இருக்கும். இங்கு வகைவகையான உணவுகளுக்கும் பஞ்சமில்லை. முக்கியமாக கடல்சார் உணவுகளை மிகவும் விரும்புபவர் எனில் உங்கள் நாவிற்கு விருந்தளிக்க ஐஸ்லாந்து சிறந்த இடம்.
தியேட்டர், தீம் பார்க் என பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. நண்பர்களுடன் சென்று வந்தால் மகிழ்ச்சியான நினைவுகளை இங்கு உருவாக்கலாம்.
Comments
Post a Comment