இந்த சிறுகோள் பூமிக்கு சேதாரம் இல்லாமல் கடந்து சென்றுவிட்டால் இத்துடன் அடுத்த 65 ஆண்டுகளுக்கு இந்த கோளினால் பூமிக்கு ஆபத்தில்லை எனவும் கூறுகிறார்கள்.
4500 அடி குறுக்களவு கொண்ட சிறு கோள் ஒன்று பூமியை 94,000 கிமீ வேகத்தில் நெருங்கி வருவதாக நாசா கவலை தெரிவித்துள்ளது..
சிறு கோள்கள், அண்டத்தில் இருந்து வரும் பிற பொருட்கள் போன்றவை வானியலாளர்களுக்கு எப்போதும் கவலை தரக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது.
விண்வெளியில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு சிறுகோள்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வியாழன் மற்றும் சனி கோள்களுக்கு இடையே சிறுகோள்கள் அதிகளவில் உள்ளதால், அவை ஏற்படுத்தும் மோதல்களில் இருந்து பூமி பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், சிறுகோள்களால் முழுவதுமாக பாதிப்பு இல்லை என்று உறுதியாக கூற முடியாது. அவை எப்போது வேண்டுமானாலும் திசைமாறி பூமியின் மீது மோதி பெரும் அழிவுகளை ஏற்படுத்தலாம்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த சிக்சுலப் (Chicxulub) சிறுகோள் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. குறிப்பாக பறக்க முடியாத டைனோசர் இனங்கள் உள்ளிட்ட அரியவகை உயிரினங்களின் அழிவுக்கு இந்த சிறுகோள் காரணமாக இருக்கலாம் என கூறுகின்றனர்.
இந்நிலையில் 2016ம் ஆண்டு முதல் முதலில் கண்டறியப்பட்ட AJ193 எனும் சிறுகோள் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது அளவில் மிகப்பெரியதாக அதாவது துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபாவைக் காட்டிலும் பெரியது என தெரியவந்துள்ளது.
2016 AJ193
4500 அடி குறுக்களவு, 1.4 கிமீ அகலம் கொண்டதாக அந்த சிறுகோள் இருப்பதாகவும் இந்த நிகழ்வை பூமியில் இருந்து தொலைநோக்கி மூலம் கண்காணித்து வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இது மணிக்கு சரியாக 94,208 கிமீ வேகத்தில் பூமியை நெருங்குவதாகவும் தெரிவித்தனர். இதனால் பூமிக்கு என்ன விதமான ஆபத்து ஏற்படும் என்பதை கணிக்க இயலாது எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த சிறுகோளால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என நம்புவதாக வானியல் அறிஞர்கள் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் பூமிக்கு சேதாரம் இல்லாமல் கடந்து சென்றுவிட்டால் இத்துடன் அடுத்த 65 ஆண்டுகளுக்கு இந்த கோளினால் பூமிக்கு ஆபத்தில்லை எனவும் கூறுகிறார்கள்.
அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா கிட்டத்தட்ட 26000 சிறுகோள்களை கண்காணித்து வருகிறது. இதில் சுமார் 1000 சிறுகோள்கள் ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக கடந்த மார்ச் 21ம் தேதி பெரிய சிறுகோள் ஒன்று பூமியைக் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment