நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்க கூடாதா..? காரணம் தெரிந்துகொள்ளுங்கள்...

கிரீன் டீயின் டானின்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அது வயிற்றில் ஆசிடை அதிகரிக்கும். இதனால் வயிற்று வலி, குமட்டல், வாந்தி அதைத்தொடர்ந்து மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வரும்.
உடல் எடை குறைப்பது தொடங்கி இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் வரையிலான உணவுப்பட்டியலில் கிரீன் டீயும் இடம் பெறுகிறது. அதோடு பால், டீ, காஃபி குடிக்கும் பழக்கம் மாறி கிரீன் டீ குடிப்பதுதான் வழக்கம் என சொல்லும் நிலைக்கு மக்கள் பழக்கமாகிவிட்டனர். கிரீன் டீ உடலுக்கு நல்லதுதான் என்றாலும் அதை வெறும் வயிற்றில் குடிக்கலாமா என்றால் நிச்சயம் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். ஏன் தெரியுமா..?

கிரீன் டீயின் டானின்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அது வயிற்றில் ஆசிடை அதிகரிக்கும். இதனால் வயிற்று வலி, குமட்டல், வாந்தி அதைத்தொடர்ந்து மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வரும். அல்சர் போன்ற நோய்கள் கொண்டவர்கள் கிரீன் டீயை வெறும் வயிற்றில் காலையில் குடிக்கவே கூடாது என பரிந்துரைக்கின்றனர்.

அதோடு வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் புரோட்டீன் அளவு குறைந்து இரத்த ஓட்டம் தடைபடும் ஆபத்து உண்டாகும். எனவே குரீன் டீயுடன் ஏதாவதொரு உணவும் சாப்பிட வேண்டும் என்கின்றனர். இல்லையெனில் இரத்தம் கெட்டியாக இறுகி இரத்தக் குழாய் அடைப்பு உண்டாகும். இரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் வெறும் வயிற்றி கிரீன் டீ குடிக்கக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அதோடு கிரீன் டீ உடலின் ஆற்றலை இழக்க வைக்கிறது. இரும்புச்சத்தையும் உறிஞ்சிவிடுகிறது. அனிமியா உள்ளவர்களும் கிரீன் டீயை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. இதய பாதிப்பு, இரத்தக் கொதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் கிரீன் டீ குடிக்கக் கூடாது.
ஏனெனில் கிரீன் டீயில் உள்ள கஃபைன் மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசோல் ஹார்மோனை உருவாக்கும். இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயத்துடிப்பின் வேகமும் அதிகரிக்கும் இது இதயக் கோளாறு கொண்டவர்களுக்கு முற்றிலும் நல்லதல்ல. எனவே காலை எழுந்ததும் வெறும் கிரீன் டீ குடிக்கும் பழக்கத்தை விடுத்து அதோடு ஏதேனும் உணவையும் சப்பிடுவது நல்லது. உதாரணத்திற்கு ஊற வைத்த தானிய வகைகள், பழங்களின் சாலட், பிஸ்கெட் இப்படி ஏதாவதொன்றை சாப்பிட்டு பின் கிரீன் டீ குடிக்கலாம்.



Comments

Popular posts from this blog

கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

Belly Fat: தொப்பை வெண்ணெய் போல் கரைய ‘3’ எளிய பயிற்சிகள்!...

பசிச்சா எடுத்துக்குங்க...' - 20 ரூபாய் பிரியாணி; காசு இல்லைன்னா FREE பிரியாணி!