நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்கும் ‘ஸ்பெஷல்’ மோர்; தயாரிப்பது எப்படி

 குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த மோர் சிறந்த வழியாகும், ஆனால் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் ஸ்பெஷல் மோர் எப்படி தயாரிப்பது என்பதை அறிந்து கொள்ளலாம். 


குழந்தைகளின் உடல் வளர்ச்சி என்பது அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. குழந்தைகளின் எலும்புகள் வலுவாக இருந்தால், அவர்களின் உடல் வளர்ச்சி மிக நன்றாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக எலும்புகள் வலுவாக இருக்க மோர்  அதிகம் கொடுக்க வேண்டும். குழந்தைகள் மோர் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 
எலும்புகள் வலுவடையும்

மோரின் நன்மைகளை விவரித்த, உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங், மோர், தயிரில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பால் பொருள். இதில் ஏராளமான கால்சியம் உள்ளது. சில குழந்தைகள் பால் குடிக்க பிடிக்காமல் இருப்பார்கள், அவர்களுக்கு,  நீங்கள் மோர் உட்கொள்ள வைக்கலாம். ஏனெனில் இது மிகவும் சுவையான பானம் என்பதோடு, குழந்தைகள் எளிதாக உட்கொள்ளவும் முடியும். மோரில் உள்ள கால்சியம் குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்துகிறது, இது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைகளுக்கு மோர் கொடுப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது

பெரும்பாலும் குழந்தைகளுக்கு வயிற்று பிரச்சினைகள் ஏற்படும். கோர் உட்கொள்வது இதற்கு தீர்வாக அமையும். ஏனெனில், மோர் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

மோர் நீரிழப்பைத் தடுக்கிறது

நாள் முழுவதும் ஓடியாடி விளையாடுவதால், குழந்தைகளுக்கு நீர்சத்து பற்றாக்குறை ஏற்படலாம் என்று டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார். இதன் காரணமாக அவர்கள் மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணரலாம். இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளுக்கு மோர் கொடுப்பதன் மூலம், அவர்களின் உடலில் நீர் சத்து பற்றாக்குறை நீங்கி ஆற்றல் பெறுகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

மோரில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர, வைட்டமின் ஏ, சி, பி மற்றும் வைட்டமின்-கே போன்ற பல சத்துக்கள் மோரில் உள்ளன.

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் சூப்பர் மோர் தயாரிப்பது எப்படி

நீங்கள் 1 கப் தயிர் எடுத்து நன்றாக கடைந்து 2 கப் தண்ணீர் சேர்க்கவும். இதன் பிறகு, அதனுடன் கருப்பு உப்பு (Black Salt) மற்றும் ஒரு சிட்டிகை வறுத்து பொடி செய்த சீரகம் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கவும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ : இதை சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!