நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமிதாப் Voice -ல் அமேசான் அலெக்ஸா - அட்டகாசமான சிறப்பம்சங்கள் இதோ!

 அமேசானின் எக்கோ டிவைஸ்களில் யூசர்கள், மேனுவலாக அமிதாப்பின் வாய்ஸை சேர்த்துக்கொள்ள முடியும்.


ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ள அமேசான் அலெக்ஸாவில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பின் குரல் இடம்பெற உள்ளது.

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் அமேசான் நிறுவனம் பல்வேறு விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறது. இதற்காக அந்த நிறுவனம் கடந்த ஆண்டு அமிதாப்புடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, AI வெர்ச்சுவல் தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள அலெக்ஸா டிஜிட்டல் அசிஸ்டென்ட்டில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் குரல்கள் இடம்பெற உள்ளன.

அமேசான் அலெக்ஸா வெர்ச்சுவல் அசிஸ்டென்ட் மூலம் மியூசிக் கேட்க முடியும், அலாரம் செட் செய்யலாம். கூடுதலாக காலநிலை அப்டேட்கள் கூட கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியும். இவையனைத்தும் அமித்தாப்பின் ஸ்டைலில், அவருடைய குரலில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள அமேசான், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல் செலிபிரிட்டி வாய்ஸ் அசிஸ்டென்ட் எனக் கூறியுள்ளது. இந்தக் குரல் பதிவானது அலெக்ஸா செயலியைக் கடந்து எக்கோ டிவைசஸ் (Echo devices), அலெக்ஸா வாய்ஸ் உதவி இடம்பெற்றுள்ள பையர் தொலைக்காட்சி (Fire TV Stick with Alexa Voice Remote) ஆகியவைகளிலும் இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

அலெக்ஸா செயலியில் அமிதாப்பின் வாய்ஸ் பெறுவது எப்படி?

அமேசானின் எக்கோ டிவைஸ்களில் யூசர்கள், மேனுவலாக அமிதாப்பின் வாய்ஸை சேர்த்துக்கொள்ள முடியும். அலெக்ஸா செயலியைப் பயன்படுத்துபவர் என்றால், செயலியில் உள்ள மைக் ஆன் செய்து, அதன் மூலம் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். ஆன்டிராய்டு செல்போன்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. அந்த செயலியில் ஏதேனும் ஒரு பொருளை வாங்குகிறீர்கள் என்றால், அலெக்ஸா, அமித்தாப்பை எனக்கு அறிமுகம் செய்து வையுங்கள் (Alexa, introduce me to Amitabh Bachchan) என குரல் பதிவிட வேண்டும். அமித்தாப்புடன் உரையாட வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் Amit ji எனக் கூறினாலே போதும். அமித்தாப்பின் குரல் ஒலிக்கும்.

இவைத் தவிர, அமித்தாப்பின் வாழ்க்கை அனுபவங்கள், அவருடைய தந்தையின் கவிதைகள், தன்னம்பிக்கை பழமொழிகள், வார்த்தை விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் அமித்தாப்பின் வாய்ஸில் இருக்கும். தங்களுக்கு தேவையானதை அமித்தாப்பின் வாய்ஸூடன் உரையாடி, அலெக்ஸா செயலியில் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியும். இது வரு வெர்ச்சுவல் வாய்ஸ் அசிஸ்டென்ட் தொழில்நுட்பம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கு பிறந்தநாள் என்றால் கூட, அதனை தெரியப்படுத்தி அமித்தாப்பிடம் இருந்து வாழ்த்து பெற்றுக்கொள்ள முடியும். இது குறித்து பேசிய அமித்தாப்பச்சன், அமேசான் அலெக்ஸாவில் தன்னுடைய வாய்ஸ் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், புதுமையான அனுபவமாக இருப்பதாக தெரிவித்தார். தன்னுடைய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும், என் குரலுடன் உரையாடும் வாய்ப்பை அமேசான் வழங்கியிருப்பதாக கூறிய அவர், என் குரலுடன் உரையாடும் அனுபவத்தை, மக்கள் எப்படி ரசிக்கப்போகிறார்கள்? அதற்கான Feedback எப்படி இருக்கப்போகிறது? என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அலெக்ஸா அமேசான் இந்தியா தலைவர் புனீஷ் குமார் பேசும்போது, தங்கள் பிராண்டான வாய்ஸ் அசிஸ்டென்டுக்கு அமிதாப் வாய்ஸ் கொடுத்திருப்பது ஐகானிக் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!