நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆமைகளுக்கு ஆபத்தான டிரைவராக மாறிய ஹிப்போபொட்டாமஸ் சவாரி

 நீர்யானையின் மீது சவாரி செய்யும் ஆமைக் கூட்டத்தின் பரிதாப நிலைமை…



சவாரிகள் பலவிதப்படும். வாகன சாவரி மட்டுமல்ல, வீட்டில் குழந்தைகளை உப்பு மூட்டை சுமக்கும் பெரியவர்களின் குதூகலமான சவாரி முதல், கடற்கரைக்குச் சென்றால், குதிரைச் சவாரி செய்வது என்ப பலவிதமான சவாரிகளை பார்த்திருக்கலாம்.

சமூக ஊடகங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்கள் வைரலாவது அதிகரித்துள்ளது. இயற்கை எழில்சூழ் இடங்களும், அங்குள்ள மிருகங்களின் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகின்றன. பொதுவாக அவை ஆபத்தானவை அல்ல, ரசிக்க வைப்பவை.
 
சமீபத்தில், இது போன்ற மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. அதில் விலங்குகளின் மீது சவாரி செய்வது பறவைகள் அல்ல. ஆமைக் கூட்டம்… ஆமைகளின் கூட்டம், நீர்யானை (Hippopotamus) மீது அமர்ந்து சவாரி செய்வதைக் காணலாம். ஆமைகள் (turtles) நீர்யானைகள் மீது அமர்ந்துள்ளன.
இந்த ரசிக்கத்தக்க 28 வினாடி காணொளியை இந்திய வன சேவை அதிகாரி சுதா ராமன் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது பலரால் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

நீர்யானையின் மீது கூட்டமாக அமர்ந்திருக்கும் ஆமைகளில் தொடங்கும் வீடியோ, இறுதியில் சில ஆமைகளுடன் முடிகிறது. ஆனந்தமாக நீர்யானையின் மீது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆமைகள், ஹிப்போவின் திடீர் நகர்வால் தடுமாறி தண்ணீருக்கும் விழுந்துவிட்டன.  ஹிப்போவின் நகரலும், ஆமைகளின் சரிவும் சில நொடிகளில் நடைபெறுகின்றன.

வீடியோவின் முடிவில் ஹிப்போபொட்டாமஸின் முதுகில் சில ஆமைகள் மட்டுமே மீதமிருப்பதை காணமுடிகிறது. அந்த வீடியோவில், "சில நேரங்களில் இலவச சவாரிகள் அபாயகரமானதாக இருக்கும்" என்ற வாசகங்களுடன் வீடியோ பகிரப்பட்டுள்ளது.



இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் குதூகலப்படும் நெட்டிசன்கள், அழகான பதிவுகள் மற்றும் தலைப்புகளுடன் வீடியோவை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். பலர் இதை இயற்கையின் அழகின் ஒரு பகுதி என்று சிலாகிக்கின்றனர். இந்த வாகனமும் ஆபத்தானது, வாகனமே ஓட்டுநராக மாறிவிட்டதே என்றும் நகைச்சுவையாக பதிவிடுகின்றனர். 

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாலூட்டியான நீர்யானை ஒரு தாவர உண்ணி ஆகும். கூட்டங்களாக வாழும் இவற்றின்  ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும். 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழும் நீர்யானைகள் 3.5 மீட்டர் நீளமானவை; 1.5 மீட்டர் உயரமானவை. 1500 முதல் 3200 கிலோகிராம் எடை கொண்டவை. 

நீர்யானைகளில் பெண் யானைகள் ஆண்களைவிட சிறியவை. தன்னுடைய இடத்திற்குள் யாராவது வந்தால் அவர்களை மூர்க்கமாகத் தாக்கக் கூடியவை.  



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!