நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் பாசமாக முத்தமிட்ட ஒராங்குட்டான் குட்டி - மனதை கவரும் வீடியோ!

 நவோமி ஒரு நர்சிங் உதவியாளர் ஆவார். அவருடைய வருங்கால கணவர் துணைப் பணியாளராக இருக்கிறார்.


இங்கிலாந்தில் அமைத்துள்ள ஒரு வனவிலங்கு பூங்காவை பார்வையிட வந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் கண்ணாடி சுவர் வழியாக ஒரு குழந்தை ஒராங்குட்டான் மீண்டும் மீண்டும் முத்தமிட்ட சம்பவம் மனதை நெகிழவைக்கப்பதாக உள்ளது. இந்த செயலால் மனம் குளிர்ந்து போன கர்ப்பிணி தாய் கண்ணீர் விட்டு அழுத வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள க்ளூசெஸ்டர் நகரில் வசிப்பவர் தான் நவோமி டேவிஸ் என்கிற பெண்மணி.

இவருக்கு தற்போது வயது 34. இவர் லெய்செஸ்டர்ஷையரில் உள்ள ட்வைக்ராஸ் வனவிலங்கு பூங்காவிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஆனால் அவரது சமீபத்திய விசிட் அவரை உணர்ச்சிவசப்படுத்தியது. வருங்கால கணவர் பென் பில்லிங்காமுடன் கடந்த 2019ம் ஆண்டு அந்த பூங்காவிற்கு நவோமி சென்றபோது ​, ஒராங்குட்டான் அடைத்துவைக்கப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு, கண்ணாடி திரைக்கு அருகில் இருந்த ஒரு குரங்கிற்கு எதிராக நின்று கொண்டார். அப்போது ஒரு குட்டி ஒராங்குட்டான் குரங்கு வயது முதிர்ந்த குரங்கின் முதுகில் ஏறி கண்ணாடி கதவு வழியாக அவரது வயிற்றில் முத்தமிட ஆரம்பித்தபோது நவோமி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். இது தொடர்பாக டெய்லி மெயிலில் வெளியான அறிக்கைகளின்படி, இந்த சம்பவம் நடந்தபோது நவோமி நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். குழந்தை ஒராங்குட்டானுக்கு கர்ப்பிணியின் பேபி பம்ப்-ஐ வெளிப்படுத்த வேண்டும் என நவோமியின் வருங்கால கணவர் ஊக்குவித்தார்.


நவோமி ஒரு நர்சிங் உதவியாளர் ஆவார். அவருடைய வருங்கால கணவர் துணைப் பணியாளராக இருக்கிறார். நவோமியின் பம்ப் மிகவும் சிறியதாக இருந்ததால், குழந்தை ஒராங்குட்டானுக்கு தனது கர்ப்பம் பற்றி தெரியாது என்று முதலில் நினைத்து கொண்டிருந்ததாக நவோமி கூறினார். பின்னர் குட்டி குரங்கு முத்தமிட்டதை கண்டவுடன் நெகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்தாவது, "ஒராங்குட்டான் கர்ப்பத்தைப் பற்றி அறிந்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.


ஆனால் குட்டி குரங்கு என் பம்பை முத்தமிடத் தொடங்கியது. அது மிகவும் அழகாக இருந்தது. அந்த சமயத்தில் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன், ” என்று டெய்லி மெயில் பத்திரிகையிடம் நவோமி கூறியதாக குறிப்பிட்டுள்ளது. அவளது காதலன் பென் அந்த அழகான தருணத்தை தன் கேமராவில் படம் பிடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ மற்ற நெட்டிசன்களையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. மேலும், இந்த வீடியோ இணையத்தில் பலரின் இதயத்தை வென்று வருகிறது.

இந்த சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்துள்ளது. நவோமி தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாக உள்ளார். அந்த குழந்தைக்கு கான்ஸ்டன்ஸ் என்றும் பெயர் வைத்துள்ளார். ஒராங்குட்டனுடன் சரியான சந்திப்புக்காக தனது மகள் கான்ஸ்டன்ஸை, ட்வைக்ராஸ் வனவிலங்கு பூங்காவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் நவோமி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "நாங்கள் எப்போதும் அந்த வனவிலங்கு பூங்காவை விரும்புகிறோம்.

ஆனால் ஒராங்குட்டான்கள் மீண்டும் வருவார்களா, அவர்கள் கான்ஸ்டன்ஸை அடையாளம் கண்டுகொள்வார்களா? என்று பார்க்க விரும்புகிறேன்" என மன நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். ஒராங்குட்டான்கள் அவற்றின் சிவப்பு ரோமங்களால் அங்கீகரிக்கப்படுகின்றன.


அவை பொதுவாக பெரிய அளவில் தோற்றமளிக்கக்கூடிய விலங்குகள். ஆவை ஆக்ரோஷமான விலங்குகள் என்றாலும், நாம் எந்த தொந்தரவும் கொடுக்காத வரை அவை நட்பாக இருக்கும். அவை மிகவும் புத்திசாலிகள் மற்றும் பகுத்தறிவும், சிந்திக்கும் திறனும் கொண்டவர்கள் ஆவர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!