இந்த நிகழ்வு விண்மீன் திரள்கள் ஒன்றாக இணைந்து ரோஜாவை உருவாக்குவது போல் தோன்றுகிறது.
பளபளக்கும் நட்சத்திரங்களாக இருந்தாலும் சரி, சுழலும் கிரகங்கள் அல்லது விண்மீன் திரள்கள் என எதுவாக இருந்தாலும் வான்வெளியில் நடக்கும் ஓவ்வொரு விஷயமும் இன்றளவும் புதிராகவே இருக்கிறது. மேலும் இந்த விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஒருபோதும் நம்மில் மறையவில்லை. அதற்கு நாசா, இஸ்ரோ போன்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்களே சாட்சி. குறிப்பாக விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சர்யங்களை தூண்டுவதை நாசா எப்போதும் செய்து வருகிறது.
விண்வெளியில் நடக்கும் சில அதிசிய நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து வெளியிடுவதில் நாசா மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை, அவர்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீஸாக வெளியிட்டுள்ளது. இது விண்வெளியில் காஸ்மிக் அதிசயங்களின் ஆதாரங்கள் இருப்பதை தெளிவுபடுத்தியது. அந்த ரீலில், பரஸ்பர ஈர்ப்பு விசையால் இரண்டு விண்மீன் திரள்கள் நடனமாடுவதை நாசா காட்டியுள்ளது.
திடீரென பார்க்கும் போது இந்த நிகழ்வு விண்மீன் திரள்கள் ஒன்றாக இணைந்து ரோஜாவை உருவாக்குவது போல் தோன்றுகிறது. இந்த காஸ்மிக் உருவாக்கம் "ஆர்ப் 273" என அழைக்கப்படுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த நாசா, "உங்கள் நாளை பிரகாசமாக்க ஒரு இனிமையான காஸ்மிக் ரோஜா" என்று கேப்ஷன் செய்திருந்தது. தலைப்புக்கு ஏற்றார் போல உண்மையில் அதை பார்ப்பதற்கு ரோஜாவை போல தான் இருக்கிறது.
மேலும் இதனை காட்சிப்படுத்தலில் இருந்த சிக்கல்களையும் கேஷனில் நாசா விளக்கியுள்ளது. அதன் படி, இரண்டு விண்மீன் திரள்களும் ரோஜா இதழ்களைப் போலவே, சுழற்சி முறையில், ஒருவருக்கொருவர் சுழல வைக்கும் பரஸ்பர ஈர்ப்பு விசையைத் தூண்டுகின்றன. விண்மீன் திரள்கள் கிட்டத்தட்ட 300 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பால்வெளி மண்டலத்தின் மிக அருகில் உள்ள அண்ட்ரோமெடா விண்மீன் தொகுப்பில் உள்ளன. இந்த தனித்துவமான காட்சிப்படுத்தல் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபஞ்சத்தின் அற்புதமான அத்தியாயத்தின் முப்பரிமாணக் காட்சியை இது நமக்கு வழங்கியுள்ளது.
இந்த இன்ஸ்டா ரீலை பூர்த்தி செய்ய, காடி சசூன் தயாரித்த ஒரு டியூனை நாசா பயன்படுத்தியது, 'லிட்டில் காஸ்மிக் ஹார்ட்' என்று பெயரிடப்பட்ட அந்த இசை காஸ்மிக் ரோஜா காட்சிக்கு மிகவும் பொருத்தமாக பொருந்துகிறது. மேலும் இந்த ரீல் வீடியோ பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே 41,000 க்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.
நெட்டிசன்கள் இந்த காட்சிகளைப் பார்த்து பிரமிப்படைந்ததாகவும், இதனை காட்சிப்படுத்தியதற்கு பாராட்டுக்களையும் கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒரு இன்ஸ்டா யூசர் குறிப்பிட்டதாவது, "நன்றி, அன்புள்ள ஹப்பிள். இது மிகவும் அழகாக இருக்கிறது." என்று எழுதியுள்ளார். மற்றொருவர், "மிகவும் அருமை. எனது தொலைபேசியில் பின்னணியாக இதை வைக்க விரும்புகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment