ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பு, பல்வேறு நோய்கள் வருவது உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் வாழும் இடம், வசதி, உணவு பழக்கம், கலாச்சாரம் அடிப்படையில் வித்தியாசமானது. ஆனால் நமது அன்றாட வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியம். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பு, பல்வேறு நோய்கள் வருவது உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், தினமும் உடற்பயிற்சி செய்வது, நமது அன்றாட வேலைகளை நாமே செய்வது போன்றவற்றின் மூலம் உங்கள் வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றலாம்.
அன்றாட உணவில் கவனம் தேவை :
பெரும்பாலான மக்கள் உடல் எடையை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் குறைத்து விட வேண்டும் என நினைக்கின்றனர். உடல் எடை இழப்பு என்பது ஒரு பயணமாக இருக்க வேண்டும். அதாவது தொடந்து டயட் முறைகளை பின்பற்ற வேண்டும். சிலர் ஒரு மாதம் அல்லது ஒரு சில வாரங்கள் மட்டும் டயட் இருந்துவிட்டு மீண்டும் வழக்கம் போல சாப்பிட ஆரம்பித்து விடுகின்றனர். டயட் என்பது நீங்கள் சிரமமின்றி பின்பற்றக்கூடிய ஒரு வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். உங்கள் உணவு பழக்கத்தில் அத்தியாவசிய மேக்ரோ மற்றும் ஊட்டச்சத்துக்களை இணைப்பது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும். தினமும் டயட் இருப்பவர்கள் அவ்வப்போது சிறிது ஆரோக்கியமான மசாலா கலந்த உணவுகளை சாப்பிடலாம்.
உங்களால் தினமும் கடினமான உடற்பயிற்சிகளை செய்ய முடியவில்லை என்றாலும், உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் எளிய உடற்பயிற்சிகளை சேர்ப்பது அவசியம். எனவே உங்களால் செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்யலாம். சிலருக்கு ஜிம் செல்ல ஆர்வம் இருக்காது, அவர்கள் வீட்டில் இருந்தே செய்யலாம். ஜாகிங், சைக்கிங் போன்றவற்றை கூட உங்கள் ஆரோக்கிய வாழ்விற்கு உதவிகரமாக இருக்கும். இதுபோன்ற உங்கள் தினசரி உடல் செயல்பாடு கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி, சரியான உடல் வடிவத்தை பெறவும் உதவுகிறது.
நல்ல தூக்கம் மற்றும் நீரேற்றமாக இருப்பது அவசியம் :
ஒரு நல்ல தூக்கம் அனைவருக்கும் அவசியமானது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உங்கள் உடலில் கார்டிசோல் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்த நன்கு தூங்க வேண்டும். தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் நீங்கள் சோர்வாக உணவர்வீர்கள், இதனால் உங்கள் அன்றாட பணிகளில் கூட கவனம் செலுத்த முடியாது. எனவே தினமும் 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் எப்போதும் நீரேற்றமாக இருப்பது அவசியம். இதனால் உங்கள் பசியும் கட்டுக்குள் இருக்கும். தினமும் பிசியாக வேலை செய்து கொண்டே இருப்பவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதில்லை. தற்போது எண்ணற்ற மொபைல் ஆஃப்ஸ்கள் தண்ணீர் குடிப்பதை நினைவுபடுத்துகின்றன. அவற்றை பயன்படுத்தி சரியான கால இடைவெளியில் தண்ணீர் அருந்துவது அவசியம்.
Comments
Post a Comment