ஆமைகள் இயல்பாகவே தாவரங்களை உண்ணுபவையாகக் கருதப்படுகின்றன.ஆமைகள் இயல்பாகவே தாவரங்களை உண்ணுபவையாகக் கருதப்படுகின்றன. ஆனால் தற்போது பெரிய ஆமை ஒன்று, பறவை ஒன்றை வேட்டையாடி, கொன்று, உணவாக உண்டது பல்வேறு ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
செய்செல்லெஸ் தீவுகளுள் ஒன்றான ப்ரிகெட் தீவில் செய்செல்லெஸ் பெரிய ஆமை ஒன்று பறவையைப் பிடித்து தின்பது வீடியோ கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இதுவரை எல்லா ஆமைகளும் தாவர உண்ணிகள் என்றே கருதப்பட்டு வந்தன. எனினும், இறந்த மிருகங்களின் மாமிசங்கள், எலும்புகள், நத்தை ஓடுகள் முதலானவற்றை ஆமைகள் கால்சியம் சத்துக்காக தின்று வந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்தனர்.
எனினும் வேட்டையாடும் ஆமை குறித்த பதிவுகள் கடந்த ஆண்டு முதல் இந்தத் தீவின் ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்டு வருகின்றன. பல்வேறு ஆமைகளும் இவ்வாறு வேட்டையாடுவது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த தேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் ஆமைகளுக்கு இந்த வேட்டையாடும் குணம், அவர்கள் வாழும் பகுதியிலேயே மரத்தில் கூடு கட்டி வாழும் டெர்ன் பறவைகளால் வந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர். மரத்தில் கூடு கட்டி வாழும் பறவைகளும், அந்த நிலத்திற்குச் சொந்தமான ஆமைகளுக்கும் இடையிலான மோதலாக இது மாறியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
பசுமைச் சுற்றுலாவுக்காக தனியார் தீவு ஒன்றில், வெவ்வேறு விலங்குகளும், பறவைகளும் வாழ்வதற்கு வசதிகள் செய்யப்பட்டதையடுத்து, கடல் பறவைகள் இந்தத் தீவுகளைத் தங்கள் வீடுகளாக்கிக் கொண்டுள்ளன. அவை வாழும் மரத்திற்குக் கீழ் மீன்களும், மரங்களில் இருந்து கீழே விழுந்த பறவைக் குஞ்சுகளும் அந்தப் பகுதியில் அதிகளவில் இருக்கின்றன.
தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில், ஆமை ஒன்று பறவைக் குஞ்சு ஒன்றின் அருகில் செல்கிறது. அந்தப் பறவைக் குஞ்சு ஆமையை ஆபத்தாகக் கருதாமல் அதுவும் ஆமையின் அருகில் செல்கிறது. அது எதிர்பாராமல் இருக்க, ஆமை அந்தப் பறவையைக் கவ்வி, சாப்பிடத் தொடங்குகிறது.
”இது முற்றிலும் எதிர்பாராத செயல். காட்டு ஆமைகள் இப்படி செய்து இதுவரை நான் பார்த்ததே இல்லை” என்று முனைவர் ஜஸ்டின் கெர்லாச் கூறுகிறார். இவர் கேம்ப்ரிட்ஜ் விலங்கியல் அருங்காட்சியகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். ஆமையின் வேட்டையும், அது அந்தப் பறவையை உண்பதும் வெறும் 7 நிமிடங்களில் நடந்து முடிந்தன என்றும் ஆச்சர்யப்படுகிறார் ஜஸ்டின்.
கேலபேகாஸ் மற்றும் செய்செல்லெஸ் தீவுகளில் இதுபோன்ற பெரிய ஆமைகள் மிகப்பெரிய தாவர உண்ணிகளாக இருக்கின்றன. தீவுகளில் மொத்த செடிகளுள் 11 சதவிகிதத்தை இந்தப் பெரிய ஆமைகள் உண்பதோடு, விதைகளைப் பரப்புவதற்கும், பாறைகளை அழிப்பதற்கும் பயன்படுகின்றன.
’ப்ரிகெட் தீவில் பறவைகளுக்கும், ஆமைகளுக்கும் இடையிலான சந்திப்பு என்பதே விசித்திரமானது. இதன் மூலம், உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் நிறைவாகப் பாதுகாக்கப்பட்டால், பல்வேறு விலங்குகளுக்கும் இடையில் வெவ்வேறு நிகழ்வுகள் நிகழ வாய்ப்புள்ளது. இதற்கு முன் நிகழ்ந்திருந்தாலும், நாம் காணாத ஊநிகழ்வுகளாக இவை இருக்கும்” என்று கூறியுள்ளார் முனைவர் ஜஸ்டின் கெர்லாச்.
Comments
Post a Comment