நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அவனி லெகரா: இந்திய பாராலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கம் வென்ற பெண் - 8 முக்கிய தகவல்கள்

பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா இந்தியாவுக்காக இன்று தங்கம் வென்றுள்ளார்.

ஒலிம்பிக், பாராலிம்பிக் இரண்டிலும் இதுவரை இந்தியா, மகளிர் பிரிவில் தங்கம் வென்றதில்லை. அவனியின் தங்கமே இப்பிரிவில் முதல் தங்கமாகும்.

10 மீட்டர் ஏர் ரைஃபிள் SH1 இறுதிப்போட்டியில் இவர் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

அவனி குறித்த எட்டு முக்கிய தகவல்கள் இதோ.

2012ஆம் ஆண்டு நடந்த கார் விபத்து ஒன்றால் உண்டான முதுகுத் தண்டுவட பாதிப்பால் அவனி மாற்றுத்திறனாளி ஆனார்.
19 வயதாகும் அவனி லெகரா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

 2015இல் ஜெய்ப்பூரில் உள்ள ஜகத்புரா விளையாட்டு வளாகத்தில் தமது பயிற்சியைத் தொடங்கினார் அவனி.
அவரது தந்தை அவனி விளையாட்டில் ஈடுபட ஊக்கமளித்தாகவும், தொடக்கத்தில் அவர் துப்பாக்கி சுடுதல், வில் வித்தை என இரண்டிலுமே ஆர்வம் காட்டினார் என்றும் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி இணையதளம் கூறுகிறது.

இந்தியாவுக்காக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவின் நூல் அவனிக்கு பெரும் ஊக்கம் தந்ததாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

2017 முதல் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் பங்கெடுத்துவரும் அவனி, ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வருகிறார்.
கொரோனா நெருக்கடி அவரது பயிற்சியை மட்டுமல்லாது தொடர்ச்சியாக பிசியோதெரப்பி சிகிச்சை பெறுவதிலும் பாதிப்பை உண்டாக்கியது. அதையும் மீறி அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
"என் வயிற்றுக்கு கீழே எனக்கு எந்த உணர்வும் இல்லை. பிசியோதெரபிஸ்ட் ஒருவர் என் வீட்டுக்கு வந்து எனக்கு சிகிச்சை அளித்து, என் கால்களை நீட்டி விடுவார்," என்று ஜூன் 2020இல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவனி லெகரா கூறியுள்ளார்.
இதுவரை ஏழு பெண்கள் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் தங்கம் வென்றதில்லை. இந்த ஏழு பேரில் ஐவர் வெண்கலமும், இருவர் வெள்ளியும் வென்றுள்ளனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!