நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ருசியான, சுவையான சவால் இது..!

 ‘7 கிலோ உணவை, 1 மணிநேரத்திற்குள் சாப்பிட வேண்டும்’, இதுதான் கடந்த வாரம் இங்கிலாந்தில் படுவைரலான விளம்பரம்.

இங்கிலாந்தில் இயங்கும் இந்திய உணவகம்தான், இந்த விநோத போட்டியை நடத்தி, வைரலானது. 24 அங்குலம் கொண்ட தட்டில் 50 வகையான இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. 3 விதமான அரிசி சாப்பாடு, 16 வகை காய்கறி உணவுகள் மற்றும் 8 வகை ரொட்டிகள் இதில் அடங்கும். இந்த உணவின் விலை ரூ.3,611.

7 கிலோ உணவை ஒரு மணி நேரத்துக்குள் சாப்பிட்டு முடித்தால், அவர்கள் கட்டிய பணத்தை திரும்ப அளிப்பதோடு, டீ-சர்ட் ஒன்றையும் அந்த உணவகம் இலவசமாக வழங்குகிறது. போட்டி அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை ஒருவர் கூட தட்டை காலி செய்யவில்லை.

“கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து உணவகத்தைத் திறந்ததால், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்தப் போட்டியை அறிவித்தோம். இந்தப் போட்டியில் உணவு ஏதும் வீணாவதில்லை. மீதமாகும் உணவை போட்டியாளர்களின் உறவினர்களும் நண்பர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். சொந்த விருப்பத்தின் பேரிலேயே போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். போட்டியில் உணவைச் சாப்பிட்டு முடிக்காவிட்டால், மீதமாகும் உணவை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கிறோம்” என்றார், உணவக உரிமையாளர் ப்ரித்தில் சச்தேவ்.


also read :


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!