நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கிரீன் டீ தரும் சரும அழகு

 கிரீன் டீ உடல் உள்ளுறுப்பு களுக்கு மட்டுமல்ல வெளிப்புற சருமத்துக்கும் நலம் சேர்க்கக் கூடியது. அழற்சி எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டது. இது முகப்பரு மற்றும் எண்ணெய் சருமத்திற்கு நிவாரணம் தரும்.


முகப்பருக்களுக்கு முக்கிய காரணம், சீபம் அதிகபடியாக உற்பத்தியாவதுதான். இது சரும துளைகளை அடைத்து பாக்டீரியாவின் வளர்ச்சியை தூண்டிவிடும். கிரீன் டீயில் இருக்கும் கேடசின்ஸ் என்னும் பொருள், ஆண்டி பயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது பாக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்தி முகப்பரு பாதிப்பையும் குறைக்கும்.


முகப்பருவை குணப்படுத்தலாம்

இரண்டு கிரீன் டீ பேக்குகளை கத்தரித்து வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். பிறகு அந்த கிரீன் டீ தூளை ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு அதனை வடிகட்டிக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குழைத்து முகப்பரு இருக்கும் பகுதியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். பின்பு உலர்ந்த துண்டு கொண்டு முகத்தை துடைக்கலாம். வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.

வயதான தோற்றத்தைகட்டுப்படுத்தலாம்

முதுமையின் ஆரம்பகால அறிகுறிகளை கவனித்து சரிபடுத்து வதன் மூலம் இளமை பொலிவை விரைவில் இழக்காமல் தக்கவைத்துக்கொள்ளலாம். கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் வயதான தோற்ற பொலிவை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருக்கின்றன. இளமையை பராமரிக்கவும், மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை பெறவும் உதவுகின்றன. கிரீன் டீயுடன் தயிரை பயன்படுத்தி வயதான தோற்றத்தை கட்டுப்படுத்தலாம்.

ஒரு டீஸ்பூன் கிரீன் டீ தூளை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ளவும். கிண்ணத்தில் அரை கப் தயிர் ஊற்றி அதனுடன் கிரீன் டீ தூளை சேர்த்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம்.

எரிச்சலை கட்டுப்படுத்தலாம்

கிரீன் டீ தூளில் அதிக பாலிபினால்கள் உள்ளடங்கி இருக்கிறது. இது அரிப்பு, எரிச்சல், சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவும். சூரிய கதிர்வீச்சுகளால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், சிறு வெட்டுக்காயங்களை குணப்படுத்தவும் கிரீன் டீயை உபயோகிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

கிரீன் டீ தூள் - 1 டேபிள்ஸ்பூன்

தேன் - 1 டேபிள்ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்

எப்படி உபயோகிப்பது: கொதிக்கும் நீரில் கிரீன் டீ தூளை 5 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவும். பின்பு அதனை வடிகட்டி மற்றொரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும். அதனுடன் தேன், பேக்கிங் பவுடர் மற்றும் சிறி தளவு தண்ணீர் சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கிரீன் டீ பேஷியல்

1. கிரீன் டீ தூளை சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள்.

2. அதனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குழையுங்கள்.

3. பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேருங்கள்.

4. அதனையும் நன்கு கலந்து முகம் முழுவதும் பூசுங்கள்.

5. 10 முதல் 15 நிமிடங்கள் உலர விடுங்கள்.

6. முதலில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.

7. பின்பு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

கிரீன் டீ உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ரசாயனங்கள் பயன்படுத்தாமல் இயற்கையான வழிமுறையில் சருமத்தை மெரு கேற்றிக்கொள்ள விரும்பு பவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம். எனினும் இந்த பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது என்பதால் பரிசோதித்து பார்த்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்