நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரிய பெண்கள் ஏன் ஸ்லிம்மாக இருக்கிறார்கள் தெரியுமா? காரணம் இது தான்

 உலகம் முழுவதும் கொரியன் சீரிஸ்க்கு மக்கள் அடிமை. குறிப்பாக ஆண்கள் அதில் நடிக்கும் பெண்களுக்காகவே சீரிஸ்களை பார்ப்பதுண்டு. அதில் நடிக்கும் 60 வயது பாட்டி முதல் இளம்பெண்கள் வரை அனைவரும் ஸ்லிம்மாக தான் இருப்பார்கள்.

டிவியில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் அவர்கள் ஸ்லிம்மாக தான் இருக்கிறார்கள். அவர்களால் மட்டும் எப்படி உடலை பிட்டாக வைத்துகொள்ள முடிகிறது குறித்து பார்க்கலாம்..



  • கொரிய பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமானவர்கள். புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து என அனைத்து உணவுகளையும் சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்கின்றனர். அதே நேரத்தில் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதிலும் கவனத்துடன் இருக்கின்றனர்.

  • கொரிய உணவில் அசைவத்துக்கு மட்டுமல்ல சைவ உணவுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சைவம் என்றாலும் பச்சைக் காய்கறிகளை அதிக அளவில் எடுத்து கொள்கின்றனர். காய்கறிகள் மூலம் உடலுக்கு நார்ச்சத்து கிடைப்பதால் பசி உணர்வும் ஏற்படாது.

  • அவர்கள் உணவில் பாக்டீரியா, ஈஸ்ட் போன்றவற்றால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகள் இல்லாமல் இருக்காது. இதன் மூலம் அவர்களின் சிறுகுடலில் வாழும் நல்ல பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிக்கிறது.
  • ஹோட்டல் உணவைக் காட்டிலும் வீட்டில் சமைத்த உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வெளியே சாப்பிடுவதை முடிந்த வரை தவிர்த்துவிடுகின்றனர். பதப்படுத்தப்பட்ட அதிக கொழுப்பு மிக்க அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்கின்றனர்.
  • பொது போக்குவரத்தை நீண்ட தூரம் மற்றும் அவசர நேரத்திற்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். மற்ற நேரங்களில் நடந்தே சென்றுவிடுகின்றனர். மேலும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.   






Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்