வயிற்றுப்பகுதி சதை vs தொடைப்பகுதி சதை - எது மிகவும் ஆபத்தானது? - ஒரு பார்வை
- Get link
- X
- Other Apps
உடல் எடை அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஹார்மோன்கள் மாற்றம் தொடங்கி உணவு உண்பது வரை பல்வேறு காரணங்களால் எடை அதிகரிக்கும். உடல் எடை அதிகரிப்பவர்களுக்கு பெரும்பாலும் இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில்தான் முதலில் எடை அதிகரிக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. தொடை மற்றும் இடுப்புப் பகுதிகளில் சேரும் எடையில் எது மிகவும் ஆபத்தானது என்பது குறித்து நிபுணர்கள் விளக்குகின்றனர். குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு உடலில் உள்ள கொழுப்பு செல்கள் பெரும்பாலும் அதிகரிப்பதில்லை, ஆனால் அந்த செல்கள் விரிவடைவது கூட எடை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும் இந்த எடை அதிகரிப்பு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாறுபடலாம் என்றும் கூறுகின்றனர்.
நிரந்த சதையைக் குறைப்பது மிகவும் கடினம்
நம் உடலின் இயக்கத்துக்கு தேவையான அளவே உணவை உண்ணவேண்டும் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். உடலின் இயக்கத்துக்கு அதிகமான உணவை உண்ணும்போது அந்த கலோரிகள் எரிக்கப்படாமல் சதையாக உடலில் சேருகிறது. இதனால்தான் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் நொறுக்குத் தீனி மற்றும் எடை அதிகரிக்கும் எண்ணெய் பண்டங்களை தவிர்க்கவேண்டும் என அடிக்கடி வலியுறுத்தப்படுகின்றனர். தொடர்ந்து நீண்டகாலம் உடலுழைப்பைவிட அதிக கலோரி நிறைந்த உணவை உண்ணுவது நிரந்தர எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது. இந்த எடையை குறைப்பதும் அவ்வளவு எளிதல்ல.
இடுப்புசதை மற்றும் தொடைசதை - எது ஆபத்து?
இடுப்பின் அளவுக்கு அதிகமாக வயிறு மற்றும் இடுப்புப்பகுதிகளில் சேரும் எடையைத்தான் இடுப்புசதை என்கின்றனர். குறிப்பாக பெண்களுக்கு இந்த இடுப்புசதை அதிகரிப்பு என்பது பெரும்பிரச்னையாகவே இருக்கிறது. குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களுக்கும் இடுப்பு சதை அதிகரிக்கிறது. இந்த இடுப்பு சதை இதயப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இடுப்புப்பகுதி சதை என்பது உள்ளுறுப்பு சதை (Visceral fats)என்கின்றனர். அதாவது உள் உறுப்புகளை சுற்றியுள்ள சதைதான் இடுப்பு சுற்றளவு அதிகரிப்புக்கு காரணம் என்கின்றனர். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கொழுப்பு என்றும் கூறுகின்றனர். இது பெரும்பாலும் இன்சுலின் சுரப்பை தடுத்து நீரிழிவு நோயை உண்டாக்குகிறது எனவும் கூறுகின்றனர்.
தொடைப்பகுதியில் எடை அதிகரிப்பு என்பது ஆண்களுக்கு பொதுவாக ஏற்படுவது. பேரிக்காய் வடிவ உடலமைப்பு கொண்ட பெண்களுக்கும் தொடைப்பகுதி சதை கூடுவது சகஜம்தான். இது வளர்சிதை மாற்ற நோய்களிலிருந்து சில நேரங்களில் பாதுகாக்கும் என்கின்றனர்.
எந்த எடையை குறைப்பது கடினம்?
நமது உடலானது ஆல்பா மற்றும் பீட்டா செல்களால் ஆனது. உடல் எடையை குறைப்பதில் ஆல்பா செல்கள் எவ்வளவு முனைப்பு காட்டுகிறதோ, பீட்டா செல்கள் அதற்கு நேரெதிராக செயல்படுகின்றன. பொதுவாக இடுப்பு சதை பீட்டா செல்களால் ஆனவையே. இதனால்தான் தொடைப்பகுதியை குறைப்பதைவிட இடுப்புப்பகுதியை குறைப்பது மிகவும் கடினமான ஒன்று எனவும் கூறுகின்றனர். இதுபோன்ற தேவையற்ற உடல் எடை அதிகரிப்பை தவிர்க்க உணவு முறையில் மாற்றம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை மிகவும் அவசியம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ALSO READ : மக்கள் தொகையை அதிகரிக்க சீன அரசாங்கம் மேற்கொள்ளும் வினோத முயற்சி
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment