நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மேக்கப் போடாமலேயே ஹீரோயின் லுக் கிடைக்க 1 ஸ்பூன் பாதாம் ஆயில் போதுமே. நிரந்தரமா உங்க முகம் தங்க நிறத்துக்கு மாறிவிடும்.

 ஹீரோயின் போல அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நம் முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை மேக்கப் போட்டு மறைத்து விடக்கூடாது. சரும பிரச்சனைகளை நிரந்தரமாக எப்படி நீக்க வேண்டும்.


 மேக்கப் போடாமலேயே இயற்கையான அழகை பெற நாம் என்ன வழிகளை பின்பற்ற வேண்டும் என்பதில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய சரும அழகிற்காக மேம்படுத்துவதற்காக இயற்கையாக கிடைக்கக் கூடிய இயற்கையான பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுங்க வேண்டும். கூடுமானவரை செயற்கையான பொருட்களை முகத்தில் போடுவதை குறைத்துக்கொள்ளுங்கள்.


நம்முடைய முகத்தில் இருக்கும் முகப்பரு பிரச்சனை, முகச்சுருக்கம் பிரச்சனை, முகத்தில் இருக்கும் குழிகள், கருந்திட்டுக்கள் கரும்புள்ளிகள் இவைகளை சரிசெய்ய மிக மிக சுலபமான முறையில் ஒரு ஜெல் நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஜெல்லை தொடர்ந்து உங்களுடைய முகத்தில் போட்டு வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் கூட சில நாட்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாக கொட்டத் தொடங்கிவிடும்‌. சரி, அந்த பேக்கை எப்படி தயார் செய்யலாம். தெரிந்து கொள்வோமா.


ஒரு சிறிய பௌல் எடுத்துக்கொள்ளுங்கள்.

 அதில் அலோ வேரா ஜெல் – 1 டேபிள் ஸ்பூன், 

தேன் – 1 டேபிள் ஸ்பூன்,

 பாதாம் ஆயில் – 1/2 ஸ்பூன்,

 கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், 

இந்த பொருட்களை எல்லாம் போட்டு ஒரு ஸ்பூனை வைத்து நன்றாகக் கலக்கினால் கோல்டன் கலர் ஜெல் நமக்கு கிடைத்திருக்கும்.

 இதை பிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஈரம் இல்லாத ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து ரூம் டெம்பரேச்சரில் வைத்தாலே 5 நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

 இந்த ஜெல்லை இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய முகத்தை நன்றாக கழுவி விட்டு, ஈரத்தைத் துடைத்து விட்டு க்ரீம் போல அப்ளை செய்து, 2 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து அப்படியே தூங்கச் செல்லலாம்.

 மறுநாள் காலை எழுந்து எப்போதும் போல முகத்தை கழுவிக் கொள்ளலாம்.


நீங்கள் வீட்டிலேயே இருப்பவர்களாக இருந்தால் காலையில் குளித்த பின்பு கூட இந்த ஜெல்லை முகத்தில் போட்டுக்கொள்ளலாம். மாலை ஒருமுறை இந்த ஜெல்லை முகத்தில் போட்டுக்கொள்ளலாம். நிரந்தரமாக உங்கள் முகத்தில் இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் படிப்படியாக ஒரு தீர்வு கிடைக்க தொடங்கும். பிறகு முகத்தில் இருக்கும் பிரச்சனைகளை மேக்கப் போட்டு மறைக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. கூடுதல் அழகு சேர்க்க மேக்கப் போட வேண்டும் என்ற அவசியம் கூட இருக்காது‌. இயற்கையாகவே உங்களுடைய சருமம் அழகாக பொலிவாக மாறத் தொடங்கும்‌. இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க.



ALSO READ : கவலையை மறந்து மகிழ்ச்சியாக இருங்கள்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!