வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதாம் பருப்பை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- Get link
- X
- Other Apps
காலை வெறும் வயிற்றில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் இந்த உணவுகள் நாள் முழுவதும் உங்கள் ஜீரண சக்தியைச் சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலுக்கு சுறுசுறுப்பு தரும்.
ஊற வைத்த பாதாம்
இதில் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை அளிக்கின்றன. நாள் முழுவதும் விரதம் இருந்தாலும் 5-10 பாதாம் சாப்பிட்டால் தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடும்.
இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடல் எடை குறைப்பு, எலும்பு ஆரோக்கியம், மனஅழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இப்படி ஆரோக்கிய பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஒரு நாளில் எவ்வளவு சாப்பிட வேண்டும்? பாதாம் பருப்பை ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் வரையிலும் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது.
ஒரு அவுன்ஸ் என்றால் 20 முதல் 24 பாதாம் வரையில் சாப்பிடலாம். இதிலிருந்து உங்களுக்கு 160 கலோரியும் ஆறு கிராம் ப்ரோட்டீனும்,14 கிராம் கொழுப்பு, ஐந்து கிராம் ஃபைபர் ஆகியவை கிடைத்திடும்.
எந்த நேரம் சாப்பிடலாம்? பாதாம் மட்டும் தனியாகவோ அல்லது பேரீட்சை மற்றும் கிஸ்மிஸ் பழத்துடனோ சேர்த்துச் சாப்பிடலாம்.
காலையில் பத்து பாதாம் மற்றும் மாலையில் பத்து என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் அத்தனையும் சாப்பிடுவது என்பது சாத்தியப் படாது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாதாம் பருப்பை சாப்பிடக்கூடாது.
ALSO READ : தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தக்காளி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment