உலகின் மிக விலையுயர்ந்த குங்குமப்பூ.. எப்படி பயன்படுத்துவது என்பது இங்கே!
- Get link
- X
- Other Apps
குங்குமப்பூவை திறம்பட மற்றும் பொருளாதார ரீதியாக பயன்படுத்துவதற்கான வழிகள்!
குங்குமப்பூ, உலகம் எங்கும் நிறைந்த மசாலாப் பொருட்களில் ஒன்று. காஷ்மீர் மாநிலத்தில் பரவலாக பயிரிடப்படும் குங்குமப்பூ, உலகின் மிக விலையுயர்ந்த ஒன்றாகும்.
எந்தவொரு உணவிற்கும் சுவை மற்றும் நறுமணத்தை வழங்குவதுடன், குங்குமப்பூ ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது பல குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் குங்குமப்பூ’ ஆயுர்வேத தோல் பராமரிப்பில் பிரபலமானது, இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, குங்குமப்பூவை திறம்பட மற்றும் பொருளாதார ரீதியாக பயன்படுத்துவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், இன்ஸ்டாகிராமில் செஃப் சரண்ஷ் கோய்லாவின் எளிய உதவிக்குறிப்பைப் பாருங்கள்.
குங்குமப்பூவின் மென்மையான சுவை ஒரு குறிப்பிட்ட வழியில் பிரித்தெடுக்கப்பட வேண்டும் என்று செஃப் கூறினார்.
குங்குமப்பூவைப் பயன்படுத்துவதற்கான வழி இங்கே:
ஸ்டெப் 1
குங்குமப்பூ இழைகளை ஒரு பாத்திரத்தில், மிதமான தீயில் மெதுவாக வறுக்கவும் அல்லது 60-90 விநாடிகள் மைக்ரோவேவ் செய்யவும். பிறகு 2-3 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
ஸ்டெப் 2
குங்குமப்பூ இழைகள் சிறிது ஆறிய பிறகு, அதை ஒரு சிறிய உரலில் வைத்து, பொடி செய்யவும் அல்லது கைகளை பயன்படுத்தியும் கிரஷ் செய்யலாம்.
ஸ்டெப் 3
குங்குமப்பூ பொடியை சேகரித்து, 1/4 கப் தண்ணீர், பால் அல்லது விருப்பமான எதையும் சுவைக்க பயன்படுத்தவும்.
இந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
- Get link
- X
- Other Apps




Comments
Post a Comment