நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வீட்டை ஒழுங்குபடுத்தும் 10 விஷயங்கள்

வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன் பராமரிப்பது எப்படி என்பது குறித்த 10 முத்தான அடிப்படை விதிமுறைகளை இங்கே அறிநது கொள்ளலாம்.
1. பொருட்களை வகைப்படுத்தி ஒழுங்காக வைக்க வேண்டுமென்றால் முதலில் தேவையற்றவற்றை நிராகரிக்க வேண்டும். உதாரணமாக ஆடைகள், புத்தகங்களை வகைப்படுத்த வேண்டும். எதற்கு முதன்மை கொடுக்க வேண்டுமோ அந்த வகையில் அமைக்க வேண்டும்.

2. வகைப்படுத்தலின் போது தேவைப்படடால் துணைப்பிரிவு செய்யுங்கள். அதாவது ஆடைகளாக இருந்தால் மேலாடை, கீழாடை, உள்ளாடை எனப்பிரித்து வையுங்கள்.
 
3.உங்களுக்கு எந்தபொருளை வைத்திருந்தால் மகிழ்ச்சியளிக்கிறதே அதை மட்டும் வைத்துகொள்ளுங்கள். உதாரணமாக பழைய துணி ஏதேனும் பிடிக்கவில்லையென்றால் அதை அகற்றி விடுங்கள். அது அளவில் சிறிதாகி உங்களது எடையை நினைவூட்டி உங்களை சோகமாக்கும்.

4. எல்லாப்பொருட்களையும் அப்புறப்படுத்திய பிறகு, காலியான இடத்தை ஒழுங்கமைக்க ஆரம்பியுங்கள். எந்த இடத்தில் எதை வைக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். மாறாக திணித்து வைக்கக்கூடாது.

5. வீட்டை சுத்தம் செய்யும் போது சோம்பேறித்தனமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் வேலையை ஒத்திவைக்காமல் உடனுக்குடன் முடிப்பது நல்லது.

6. பொருட்களை சிறியது பெரியது என அடுக்க வேண்டும். ஒரே அளவில் இருக்கும் பொருட்களை சேர்த்து அடுக்கினால் பார்க்க நன்றாக இருக்கும். மேலும் இப்படி செய்வதால் பொருட்களும் தொலைந்து போகாமலிக்கும். அவை இருக்கும் இடத்தையும் எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

7.அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை கைக்கு எட்டும் தூரத்தில் வைப்பது நல்லது. அரிதாக பயன்படுத்தும் பொருள்களை அவற்றுக்கு பின்னாலோ அல்லது கடைசியிலோ வைக்கலாம்.

8. எந்த வகையில் பொருட்களை அடுக்க ஆரம்பித்தீர்களோ அதிலிருக்கும் பொருட்கள் வீட்டில் எங்கே இருந்தாலும் எடுத்து வந்து ஒரே இடத்தில் வைக்க வேண்டும். எது வேண்டும் எது தேவையில்லை என்று வகைப்படுத்த மிகவும் 
முக்கியமான கட்டம் இது. ஐந்து விதமாக ஒரே பொருளை வைத்திருந்தால் அதில் ஒன்றை மட்டும் வைத்து விட்டு மற்றவற்றை நிராகரிக்கலாம்.

9. உங்கள் வீட்டுக்கு ஒருமுறை நன்றி கூறுங்கள். இது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இதுவும் ஒரு பயிற்சிதான். உங்கள் வீடு உங்களை பாதுகாத்து இத்தனை பொருட்களை வைக்க இடம் தந்ததற்காக நன்றி கூறுங்கள். நீங்கள் நிராகரிக்கப்போகும் பொருட்களுக்கும் அவை செய்த சேவைக்கும் கூட நன்றி கூறலாம்.

உங்களுக்கு தேவையில்லாத பொருட்கள் வேறொருவருக்கு மகிழ்ச்சியளிக்கலாம். அவற்றை யாருக்காவது அன்பளிப்பாக கொடுத்து விடுவது மிகவும் மகிழ்ச்சி தரும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!