1400 வருடங்களுக்கு முன் பயன்படுத்தப்பட்ட வாள் பிரமிடு இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!
- Get link
- X
- Other Apps
இது வாளை அதன் உறையில் வைத்து பொருத்த பயன்பட்ட டெக்கரேட்டிவ் ஃபிட்டிங் என்று தகவல் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஒரு மெட்டல் டிடெக்டரிஸ்டால் (உலோகங்களை கண்டறியும் நிபுணர்) சுமார் 1400 வருடங்களுக்கு முன்பு இருந்த ஒரு வாள் அலங்கார பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆய்வாளரும், மெட்டல் டிடெக்டரிஸ்ட்டுமான ஜேமி ஹர்கோர்ட், கடந்த ஏப்ரல் மாதம் கிழக்கு இங்கிலாந்தின் நோர்ஃபோக்கின் ப்ரெக்லேண்ட் பகுதியில், இந்த ஆங்கிலோ-சாக்சன் (Anglo-Saxon) பொருளை கண்டுபிடித்தார். இந்த கலைப்பொருள் 6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.இது 3.0 கிராம் எடை மற்றும் 6.0 மிமீ உயரம் கொண்டுள்ளது. துண்டிக்கப்பட்ட சிகரத்துடன் கூடிய பிரமிடு போல வடிவமைக்கப்பட்ட இந்த கலைப்பொருளின் சதுர அடி ஒவ்வொரு பக்கத்திலும் அரை அங்குலத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. மெட்டல் டிடெக்டரிஸ்ட் ஜேமி ஹர்கோர்ட் கண்டறிந்த இது வாள் பிரமிட் என்று குறிப்பிடப்படுகிறது. இது வாளை அதன் உறையில் வைத்து பொருத்த பயன்பட்ட டெக்கரேட்டிவ் ஃபிட்டிங் என்று தகவல் கூறப்பட்டுள்ளது. இது ஏதாவது ஒரு பெரிய பணக்கார பிரபு அல்லது மன்னர் பரிவாரங்களில் இருந்தவருக்கு சொந்தமானதாக இருக்கலாம்.
இங்கிலாந்தின் நோர்ஃபோக்கின் ப்ரெக்லேண்ட் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த வாள் அலங்கார பொருள் அருகிலுள்ள Sutton Hoo burial-ல் காணப்படும் கலைப்பொருட்களுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளதாக ட்ரஷர் ஹன்ட்டிங் இதழ் கூறி இருக்கிறது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை தெரிவித்துள்ள கையடக்க தொல்பொருள் திட்ட தொடர்பு அதிகாரி (Portable Antiquities scheme liaison officer ) ஹெலன் கீக், தங்கம் மற்றும் கார்னெட்டில் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் இந்திய அல்லது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவை. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த வாள் பிரமிடை பயன்படுத்தியவர் அரச குடும்பத்தை சேர்ந்த உறுப்பினராக இருக்கலாம்.
மேலும் அவர் ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா - ஆசியா இடையே நடைபெற்ற தொலைதூர வர்த்தக நெட்வொர்க்குகள் பற்றி இந்த வாள் பிரமிடு ரத்தின கற்கள் எடுத்துரைக்கின்றன என்று தான் கருதுவதாக கூறியுள்ளார். இந்த பொருள் நிச்சயம் ஒரு பெரிய பிரபு அல்லது ஆங்கிலோ-சாக்சன் ராஜாவின் பரிவாரங்களில் யாரோ ஒருவருக்குச் சொந்தமானதாக இருந்திருக்கும்.மேலும் அவர் தற்போது வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்க கூடும் என்றார்.
தொடர்ந்து பேசிய ஹெலன் பொதுவாக வாள் பிரமிடுகள் ஜோடிகளாக தான் வரும். ஆனால் இது தனியாக காணப்படுகிறது. இதை பயன்படுத்திய உரிமையாளர் இந்த ஒன்றை தவறவிட்டிருக்கலாம். இது இரு காதணிகளில் ஒன்றை மட்டும் இழந்தது போல உரிமையாளரை மிகவும் எரிச்சலடைய செய்திருக்கலாம் என்றார். இந்த பொருள் அதன் வடிவமைப்பின் அளவைக் குறைக்க, பான்டோகிராஃப் மூலம் அடையப்பட்டதைப் போன்ற நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வாள் அலங்கார பொருள் எதற்காக உருவாக்கினர் என்பதன் நோக்கம் நிச்சயமற்றது என்றாலும், தங்கள் உறையில் வைக்கும் வாள்களைப் பாதுகாக்க இது உதவியிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புவதாக குறிப்பிட்டார்.
ALSO READ : 7 கிலோ உணவை ஒரு மணிநேரத்தில் சாப்பிட முடியுமா? இதோ ஒரு ரெஸ்டாரன்ட் கொடுக்கும் சவால்..!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment