நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Auction Action: ஸ்டீவ் ஜாப்ஸின் முதல் வேலை விண்ணப்ப படிவத்தின் ஏல மதிப்பு இவ்வளவா?

 ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் ஒரே வேலை விண்ணப்பம் மிகப் பெரிய தொலைக்கு ஏலம் போனது. வீடியோ கேம் வடிவமைப்பாளராக இந்த வேலையில் சேர்ந்த ஜாப், இந்த விண்ணப்பத்தை அனுப்பியபோது அவருக்கு 18 வயதுதான்.   


ஆப்பிளின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரேயொரு வேலைக்குக் மட்டும் தான் தனது கைப்பட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்திருக்கிறார். அது ஏலம் விடப்பட்டது, அது எவ்வளவு தொகைக்கு ஏலம் போனது தெரியுமா?

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவகர் ஸ்டீவ் ஜாப்ஸ். லட்சக்கணக்கானவர்களுக்கு அவர் வேலை கொடுத்திருந்தாலும், அவரும் ஒரு காலத்தில் வேலைக்காக விண்ணப்பித்திருக்கிறார். அவரது திறமையின் காரணமாக அனைவருக்கும் முன்னோடியாக திகழ்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். 2011ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பினால் காலமானார் ஸ்டீவ் ஜாப்ஸ். 

தொழில்நுட்ப அறிவாளி எனப் புகழப்படும் ஸ்டீவ் ஜாப்ஸால் நிரப்பப்பட்ட கையால் எழுதப்பட்ட வேலை விண்ணப்பப் படிவம் 3,43,000 அமெரிக்க டாலருக்கு (ஏறத்தாழ ரூ. 2.5 கோடி) ஏலம் விடப்பட்டது. அவர் இந்த விண்ணப்ப படிவத்தை 1973 ல் பூர்த்தி செய்தார். இது அவரால் வழங்கப்பட்ட ஒரே வேலை விண்ணப்பம் என்று நம்பப்படுகிறது.

அதற்கு பிறகு 1976ம் ஆண்டில் அவர் தனது நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக் உடன் இணைந்து ஆப்பிள் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அவர் இட்ட வித்து இன்று ஆலமரமாய் பலருக்கு வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது.

வீடியோ கேம் வடிவமைப்பாளராக இந்த வேலையில் சேர்ந்த ஜாப், இந்த விண்ணப்பத்தை அனுப்பியபோது அவருக்கு 18 வயதுதான்.  

இது ஸ்டீவ் ஜாப்ஸின் ஒரே வேலை விண்ணப்பமாக கருதப்படுகிறது, ஏனெனில் 1976 இல் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸை நிறுவி, 1977 ல் ஆப்பிள் II என்ற பெயரில் நிறுவனத்தின் முதல் வெற்றிகரமான தனிப்பட்ட கணினியை அறிமுகப்படுத்தினர்.

இந்த விண்ணப்பப் படிவத்தில், 'பெயர்: ஸ்டீவன் ஜாப்ஸ், முகவரி: ரீட் கல்லூரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைபேசி: எண் குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பத்தில் மேஜர் படிப்பாக ஆங்கில இலக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்கில்ஸ் பகுதியில் கம்யூட்டர், கால்குலேட்டர் என்றும், தொழில்நுட்பம், டிசைன் பொறியியலில் சிறப்புத் தகுதி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டீவ் ஜாப்ஸ் போர்ட்லேண்டின் ரீட் கல்லூரியில் படித்தார். படிப்பை பாதியில் விட்டுவிட்டு இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். 

ஸ்டீவ் ஜாப்ஸின் இந்த விண்ணப்ப படிவம் ஏலம் விடப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே, இது 2017 இல் $ 18,750 க்கும், 2018 இல் $ 1,74,757 க்கும், மார்ச் 2021 இல் $ 2,22,400 க்கும் என ஏலம் விடப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஏலத்தில், இந்த விண்ணப்பம் அதிகபட்ச விலை $ 3,43,000 (சுமார் ரூ. 2.5 கோடி) வாங்கப்பட்டது.

சமீபத்திய ஏலத்தின் ஒரு சிறப்பு அம்சம், இந்த முறை அதன் NFT ஏலமும் செய்யப்பட்டது. அதாவது, படிவத்தின் அசல் பிரதியுடன், அதன் டிஜிட்டல் நகலும் டிஜிட்டல் சொத்தாக விற்கப்பட்டது. இருப்பினும், அதன் டிஜிட்டல் பதிப்பின் விலை $ 23,076 (சுமார் ரூ. 17 லட்சம்) மட்டுமே.



ALSO READ : Venezuela: நாணயத்தை மாற்றிய அரசு; ஒரே நாளில் லட்சாதிபதிகள் திவாலான சோகம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்