சிறிய மண்வெட்டி வடிவ வெண்கல நாணயங்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இது 550 கி.மு. மற்றும் 640 கி.மு. க்கு இடையில் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
கிழக்கு சீனாவின் ஹெனான் மாகாணத்தில் 2,600 ஆண்டுகள் பழமையான நாணயத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் பழமையான நாணயமாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
ஹெனான் மாகாணத்தில் உள்ள மஞ்சள் நதிக்கு தெற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பண்டைய சீன நகரமான குவான்சுவாங்கின் அகழ்வாராய்ச்சி பணிகள் கடத்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியின் போது பழமையான நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிமு 800ல் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் குவான்சுவாங்-ல் 2011 முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு சுவர்கள் கொண்ட அடைப்புகள் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் போது நாணயங்கள் கிடைத்துள்ளது.
குறிப்பாக சிறிய மண்வெட்டி வடிவ வெண்கல நாணயங்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இது 550 கி.மு. மற்றும் 640 கி.மு. க்கு இடையில் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது, துருக்கியில் காணப்படும் லிடியன் சிங்கம் நாணயங்கள், மற்றும் 550 கி.மு - கிமு 575க்கு முந்தைய நாணயங்கள் என்று நம்பப்படுகிறது. ஆராய்ச்சியின் முதன்மை எழுத்தாளரும் ஜெங்ஜோ பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளருமான ஹாவ் ஜாவோ நேஷனல் ஜியோகிராஃபிக்கிடம் குவான்சுவாங் இதுகுறித்து பேசுகையில், "தற்போது உலகின் மிகப் பழமையான பாதுகாப்பான சுரங்கத் தளம்" இதுதான் என்று கூறினார்.
ஜாவோவின் கூற்றுப்படி, நகரத்தை நிறுவியதை விட சுமார் 100 ஆண்டுகள் கழித்து நகரத்தின் பட்டறையானது 700 கிமு-ல் திறக்கப்பட்டது. ஃபவுண்டரி ஆயுதங்கள், கருவிககளை உருவாக்கியது. சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு, நகரின் தெற்கு வாயிலுக்கு வெளியே நாணயங்கள் அச்சிடத் தொடங்கின.
தற்போது இந்த இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் ஒரு நாணயத்தை கண்டுபித்துள்ளனர். அந்த நாணயம் கிட்டத்தட்ட ஒரு மண்வெட்டி வடிவத்தில், அதாவது 6 அங்குல நீளத்திற்கும் குறைவான மற்றும் 2.5 அங்குல அகலத்திலும் கண்டுபிடித்தனர். வெண்கல நாணயத்தின் எடை 27 கிராம், இது நான்கு 10 ரூபாய் நாணயங்களின் எடையை விட சற்று குறைவாக இருந்தது. இரண்டு நாணயங்களைத் தவிர, நாணயங்களை வார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் களிமண் அச்சுகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த கண்டுபிடிப்பின் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நாணயங்கள் அவற்றின் முழுமையான சூழலுடன் காணப்படுகின்றன. அதைத் தவிர, உத்தியோகபூர்வ நகர நிர்வாகத்தின் அனுமான இடத்தின் அருகாமையில் இருப்பது உள்ளூர் அரசாங்கத்தால் அந்த நாணயங்கள் அங்கீகரிக்கப்படுவதைக் குறிக்கிறது.
இந்த கண்டுபிடுப்புகள் ஆகஸ்ட் 6 அன்று சீனாவில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முன் நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்ததும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அந்த காலத்து நாணையங்கள் தான் என்பது தெரியவந்துள்ளது.
Comments
Post a Comment