ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய பிரிட்ஜில் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது.
ஆன்லைன் மூலம் உபயோகப்படுத்தப்பட்ட பிரிட்ஜை வாங்கிய நபருக்கும் அதிர்ஷ்டம் கொட்டியுள்ளது. பிரிட்ஜை திறந்ததும் கட்டுக்கட்டான ரொக்கப்பணம் இருந்துள்ளது.
அதிர்ஷ்டம் அடிக்கனும்னு இருந்தா எப்படி வேணும்னாலும் அடிக்கனும். கூரையை பிச்சிக்கிட்டும் கொட்டும், ஏன் பிரிட்ஜை திறந்தும் கூட கொட்டும். தென்கொரியாகாருக்கு அப்படி அடிச்சிருக்கு அதிர்ஷ்டம்.தென்கொரியாவின் ஜேஜூ தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மூலம் உபயோகப்படுத்தப்பட்ட பிரிட்ஜை வாங்கியுள்ளார். கடைகளில் உபயோகப்படுத்தும் பிரிட்ஜ் அது. இந்த பிரிட்ஜை வாங்கும்போது தன்னுடைய வாழ்க்கையே மாறப்போகுது என அவர் நினைத்திருக்க மாட்டார். ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரிட்ஜ் டெலிவரியை செய்துவிட்டார்கள். வீட்டில் சும்மா தானே இருக்கும் இந்த பிரிட்ஜை க்ளீன் செய்து வைப்போம்னு அந்த நபர் பிரிட்ஜை திறந்துள்ளார்.
உள்ளே பார்த்தால் கட்டுக்கட்டா பணம். இது என்ன கனவா நினைவா என அவரே ஒரு நிமிடம் ஷாக் ஆகிவிட்டார். பிளாஸ்டிக் கவரில் பணம் பத்திரமாக கட்டப்பட்டிருந்தது. ஷாக்கான வேலைக்கு ஆகுமா என எவ்வளவு பணம் இருக்கு அப்படின்னு என்ன ஆரம்பித்துள்ளார். நம்மூர் மதிப்புக்கு சுமார் 96 லட்சம் இருந்துள்ளது. இது நம்முடைய பணம் இல்லையேன்னு போலீஸூக்கு தகவல் சொல்லிவிட்டார்.
போலீஸ்காரர்களிடம் பிரிட்ஜில் கண்டெடுத்த பணத்தை கொடுத்துவிட்டார். போலீஸில் ஒப்படைந்தாலும் அவருக்கு சன்மானமா ஒரு தொகை கைக்கு வந்து சேரும். அப்படி இருக்கு தென்கொரியா சட்டதிட்டம். தென்கொரியா சட்டப்படி ஒருவர் பணத்தையோ, பொருளையோ கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைக்கிறார் என்றால் கண்டெடுத்த நபரை முதலில் அதிகாரிகள் விசாரிப்பார்கள். இதன்பின்னர் பணத்தையோ, பொருளையோ உரியவரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். அப்படி அந்த பொருளுக்கு உரிமையானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அந்த பணத்தை கண்டெடுத்தவரிடமே அரசு ஒப்படைத்துவிடும். என்ன அந்த பணத்துக்கு ஒரு 22 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் அவ்வளவுதான்.
சரி பணத்துக்கான உரிமையாளர் கிடைத்துவிட்டார் என்றால் அந்தபணத்தில் ஒரு பகுதி சன்மானமாக வழங்கப்படும். அது குற்றப்பிண்ணனி கொண்ட பணமாக இருந்தால் அதாவது கொள்ளையடிக்கப்பட்ட பணமாக இருந்தால் இருவரிடமும் ஒப்படைக்கப்படமாட்டாது. இதில் ஒரு சுவாரஸ்மான தகவல் என்னவென்றால் தென்கொரியா வங்கிகளில் வட்டிவிகிதங்கள் மிகவும் குறைவு என்பதால் மக்கள் வங்கிகளில் பணத்தை சேமிப்பதைவிட்டுவிட்டு இதுபோன்ற குளிர்சாதன பெட்டிகள் பணத்தை சேமிக்கும் பழக்கும் மக்களிடம் இருப்பதாக கொரியா டைம்ஸ் பத்திரிகையில் 2016 ஆண்டு ஒரு அறிக்கை வெளியாகியிருந்தது.
Comments
Post a Comment