ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியைப் பராமரிக்க, நல்ல உணவை உட்கொள்வது முதல் சரியான சுத்திகரிப்பு நுட்பங்களைப் பயன்படுத்துவது வரை பல காரணிகள் உள்ளன.
நீளமான, பளபளப்பான, உறுதியான கூந்தலைப் பெறுவது என்பது எளிதில் அடையக்கூடிய ஒன்றுதான். கூந்தல் பராமரிப்புக்கு சிறிது நேரம் ஒதுக்கி உங்களுக்கு உதவக்கூடிய அனைத்து இயற்கை வழிகளையும் பின்பற்றவேண்டும். அந்த வகையில் பின்வரும் சில உதவிக்குறிப்புகளை நீங்கள் பின்பற்றி வந்தால், உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை நீங்கள் கவனிக்கத் தொடங்கலாம்.
1. மசாஜ்
வழக்கமான முடி மசாஜ் செய்வது உங்களின் முடி வளர்ச்சியை அதிகரிக்கும். எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வது உச்சந்தலையைத் தூண்டுவதால், முடி அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. அதேபோல கூந்தலின் வேர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் அழுக்கு, எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்கள் உச்சந்தலையில் குவிந்து முடி வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, தலையில் எண்ணெய் அல்லது ஷாம்பு போடும்போது மசாஜ் செய்தவாறு தடவலாம்.
2. கூந்தலை மெதுவாக உலர்த்தவும்
தலைக்கு குளித்தபின் துண்டைக் கொண்டு உங்கள் முடியை தலைப்பாகை போல் போர்த்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இது முடி உதிர்தலை ஏற்படுத்தும். மாறாக, மெதுவாக உலர்த்தி, மென்மையான துண்டுடன் தட்டியபின் இயற்கையாகவே முடியை உலரவிடுவது நல்லது.
3. தேங்காய் எண்ணெயை முயற்சிக்கவும்
தேங்காய் எண்ணெய் முடிக்கு சிறந்த எண்ணெய்களில் ஒன்றாக அறியப்படுகிறது. கொழுப்பு அமிலங்களுடன் செறிவூட்டப்பட்ட இது கூந்தலில் புரதத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த எண்ணெய் உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், உள்ளிருந்து வளர்க்கவும் உதவுகிறது.
4. சூடான நீரில் கூந்தலை அலசுவதைத் தவிர்க்கவும்
உங்கள் தலைமுடியை சூடான நீரால் கொண்டு அலசினால், அது தலைமுடியை பலவீனப்படுத்தும். அதற்குப் பதிலாக சாதாரண தண்ணீரையோ குளிர்ந்த நீரையோ பயன்படுத்தவும். இவை உங்கள் முடிநுனியை உறுதியாக வைத்திருக்க உதவும்.
5. முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம்
ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை இரண்டு முட்டை வெள்ளைக்கரு மற்றும் சிறிது எலுமிச்சை சாறுடன் சேர்த்து உங்கள் தலைமுடியில் தடவவும் அல்லது சூடான ஆலிவ் எண்ணெய், இலவங்கப்பட்டை மற்றும் தேன் ஆகியவற்றின் கலவையை 10 நிமிடங்களுக்கு கூந்தலில் தடவலாம். இவை ஒரு ஹேர் மாஸ்க்-ஆக நன்றாக வேலை செய்யும். பிறகு தண்ணீரில் கூந்தலை அலசுங்கள்.
6. உணவில் ஒமேகா 3 ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கவும்
உங்கள் தலைமுடிக்கு சிறந்த சப்ளிமெண்ட்களில் ஒன்று ஒமேகா. இது முடி உதிர்தலை சரிசெய்யவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. இருப்பினும், எந்தவொரு சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதற்கு முன்பும் ஒரு மருத்துவரை அணுகவேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பயோட்டின் (வைட்டமின் பி 1) மற்றும் துத்தநாகம் போன்ற சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் உங்கள் தலைமுடி வளர காரணமான செல்களைத் தூண்டுகிறது.
7. புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்:
புகைபிடிப்பது உங்கள் சரும ஆரோக்கியத்தை மட்டுமல்ல, முடியையும் பாதிக்கிறது. புகைபிடிப்பது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். ஏனெனில் இது முடி வேர்களின் டி.என்.ஏவை சேதப்படுத்தும் மேலும் முன்கூட்டிய நரை முடி மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும்.
8. உணவில் புரதத்தைச் சேர்க்கவும்
ஆரோக்கியமான கூந்தலுக்கு போதுமான அளவு புரதத்தைச் சாப்பிடுவது முக்கியம். புரதம் இல்லாத உணவு முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். வெறுமனே, ஒருவர் தங்கள் உடல் எடையின் அடிப்படையில் ஒரு நாளைக்கு 50 முதல் 100 கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment