இறந்த பின் ஐஸ்பெட்டியில் நெடு நேரம் வைக்கப்பட்டவர் ‘குறட்டை’ விட்ட திகில் சம்பவம்
- Get link
- X
- Other Apps
ஸ்பெயினில் மூன்று மருத்துவர்களால் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டவர், பிரேத பரிசோதனைக்கு சற்று முன்னர் உயிருடன் கண்டறியப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது விந்தைகள் நிறைந்த உலகம். உலகின் அனைத்து இடங்களிலும் விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. உண்மை சம்பவங்கள் சில நேரங்களில் புனைகதைகளை விட வினோதமானவையாக உள்ளன. ஸ்பெயினில் ஒன்றல்ல, மூன்று மருத்துவர்களால் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டவர், பிரேத பரிசோதனைக்கு சற்று முன்னர் கண் விழித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சயின்ஸ்அலெர்ட் (ScienceAlert) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. 2018, ஜனவரி 7ம் தேதி அன்று ஸ்பெயினின் சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி கோன்சலோ மோன்டோயா ஜிமெனெஸ் (Gonzalo Montoya Jimenez) மயங்கி விழுந்தார்.
சிறைச்சாலையில் அன்றைய தினம் பணியில் இருந்த இரண்டு மருத்துவர்கள் இவரை சோதித்தனர். இருவரும் அந்த கைதி இறந்து விட்டதாக அறிவித்தனர்.இறப்பை உறுதிப்படுத்த, ஒரு தடயவியல் மருத்துவரை அழைத்து பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அவரும், கைதி இறந்ததாக அறிவித்தார்.
ஒரு கைதி இறந்தால், பின்பற்றப்படும் விதிமுறைகளை பின்பற்றி ஜிமெனெஸ் உடல் பையில் வைக்கப்பட்டு சவக்கிடங்கின் குளிர் சேமிப்பு கிடங்கில் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டார். இந்நிலையில், சவக்கிடங்கில் பணியில் இருந்த மருத்துவர்களுக்கு குறட்டை சத்தம் கேட்டது. அவர்கள் பரிசோதித்து பார்த்ததில், ஜிம்னெஸ் வைக்கப்பட்ட பெட்டியில் இருந்து குறட்டை சத்தம் வருவது கேட்டது.
அவர்கள் உடனே அவரை வெளியே எடுத்து பார்த்ததில் ஜிமெனெஸ் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. ஐஸ் பெட்டியில் நெடு நேரம் வைக்கப்பட்ட பின்னும் அவர் இறக்காமல் இருந்தது அதிசயம் தான் என கூறப்பட்டது.
பின்னர் அவர் ஒரு மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட பின். அவர் உடல் நிலை சீரானது.
மருத்துவமனை அதிகாரிகள் இது குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்த போது, இது கேடலெப்சி (Catalepsy) வகையை சேர்ந்த ஒரு நிகழ்வாக இருந்திருக்கலாம், இதில் மனித உடல் வலிப்பு அல்லது டிரான்ஸ் போன்ற நிலைக்குள் ஆளாகி உணர்வுகளை இழக்கும் நிலை ஏற்படலாம் என கூறினர். அப்போது அவர்கள் உடலில் இயக்கம் ஏதும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஜிமெனெஸ் சரியான நேரத்தில் விழித்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க கூட அச்சமாக உள்ளது.
ALSO READ : துருக்கியில் உள்ள ‘மர்ம’ கிரேக்க கோவில்; இங்கே போனவர் யாரும் திரும்பியதில்லை..!!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment