Brain Foods: இந்த ‘5’ உணவுகள் குழந்தையின் மூளை கணிணி போல் இயங்க உதவும்
- Get link
- X
- Other Apps
குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் உணவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம். இதை கொடுப்பதால் உங்கள் குழந்தையின் மூளை ஒரு கணினி போல வேலை செய்யும். நினைவாற்றலும் பெருகும்.
Brain Foods: போட்டிகள் நிறைந்துள்ள இவ்வுலகில், ஒவ்வொருவரும் தனது குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அவரது மூளை ஒரு கணினி போல வேலை செய்ய, நினைவாற்றல் பெருக, சில உணவுகள் பெரிதும் உதவும். அதன் மூலம் குழந்தைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், குழந்தைகளை புத்தி கூர்மைக்கு, மூளைக்கு ஊட்டமளிக்கும் உணவுகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்டுரையில், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் இதுபோன்ற 5 விஷயங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் உங்களுக்காகத் தருகிறோம்.குழந்தைகளுக்கு மூளையை அதிகரிக்க இந்த உணவுகளை அவர் பரிந்துரைக்கிறார்.
1. முட்டை
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் முட்டைகள் அவசியம். இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லுடீன், கோலின் மற்றும் துத்தநாகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் குழந்தையின் மூளைத் திறனை அதிகரிக்கிறது. கவனசிதறல் ஏற்படாமல் மனதை ஒருமுகப்படுத்துகிறது. மேலும் முட்டை, கோலிக் அசிடைல்கோலின் அல்லது மெமரி ஸ்டெம் செல்களை, அதாவது நினைவுத் திறனுக்கான செல்களை உருவாக்க உதவுகிறது. எனவே முட்டைகளை சாப்பிடுவது குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
2. மீன்
குழந்தைகளின் புத்தியை கூர்மையாக்க மீன் அவசியம். சால்மன், டுனா மற்றும் கானாங்கெளுத்தி போன்ற போன்ற மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது மூளை திசுக்களை உருவாக்க உதவுகிறது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் பல நன்மைகள் உள்ளன. இது மூளையின் செயல்பாடுகளுக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
3. முழு தானியங்கள்
முழு தானியங்கள் குழந்தைகளின் மூளைக்கு நிலையான ஆற்றலைக் கொடுக்கும். இது இரத்த நாளங்களில் உள்ள குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது. இதன் காரணமாக, குழந்தையின் உடலில் நாள் முழுவதும் நீடித்த ஆற்றல் இருக்கும். மூளையின் சரியான செயல்பாட்டிற்கு தேவையான ஃபோலிக் அமிலமும் இதில் உள்ளது.
4. ஓட்ஸ்
ஓட்ஸில் வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி அதிக அளவில் காணப்படுகிறது. ஓட்ஸ் உணவில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், குழந்தையின் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. குழந்தைகளுக்கு காலை உணவாக ஓட்ஸ் உண்பது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.
5. மூளை வளர்ச்சிக்கான சில காய்கறிகள்
கீரை, வாழைப்பழம், ப்ரோக்கோலி மற்றும் இதர பச்சை நிற காய்கறிகள் புத்தி கூர்மையை மேம்படுத்த உதவும். தக்காளி போன்ற வேறு சில காய்கறிகள் இன்னும் சிறந்தது. புளுபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளன, இது மூளையின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றானது இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
ALSO READ : அழகு: குட்டை தலை முடியின் அழகு ரகசியம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment