நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தனது 23வது பிறந்தநாளை தனித்துவமான டூடுல் வெளியிட்டு கொண்டாடும் கூகுள்!

 லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவருடனும் இணைந்து கூகுளை முழுமையான சர்ச் என்ஜினாக ப்ரோக்ராம் செய்தவர் ஸ்காட் ஹசன்.


உலகளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல சர்ச் என்ஜினான கூகுள், நேற்று (செப்டம்பர் 27) தனது 23-வது பிறந்த நாளை கொண்டாடியது .  இதனையொட்டி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது ஹோம் பேஜில் ஒரு சிறப்பு டூடுலை வைத்து இருக்கிறது. பிரபலங்கள் மற்றும் உலக தலைவர்களின் பிறந்தநாள், முக்கிய பண்டிகைகள், பிரபலங்கள் அல்லது விளையாட்டு வீரர்களின் சாதனைகள் உள்ளிட்ட பலவற்றை உலக மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் கூகுள் தனது சர்ச் எஞ்சினின் ஹோம் பேஜில் சிறப்பு டூடுலாக வைப்பது வழக்கம்.

அந்த டூடுலை கிளிக் செய்தால் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அது தொடர்பான செய்திகளை யூஸர்கள் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று 23-வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள், தனக்கான சிறப்பு டூடுலை தன் ஹோம் பேஜில் கொண்டுள்ளது. இந்த பிறந்தநாள் ஸ்பெஷல் டூடுலில் Google என்ற ஆங்கில ஸ்பெல்லிங்கில், L என்ற எழுத்திற்கு பதிலாக எரியும் மெழுகுவர்த்தியுடன் கூடிய பிறந்தநாள் கேக் காணப்படுகிறது.

உண்மையில் கூகுள் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த பிஎச்டி மாணவர்களான, லேரி பேஜ் (Larry Page) மற்றும் செர்ஜி பிரின் (Sergey Brin) ஆகியோரால் நிறுவப்பட்டது. இவர்கள் இருவரும் தங்களது யுனிவர்சிட்டி ப்ராஜெக்ட்டிற்காக ஒரு ஆன்லைன் சர்ச் என்ஜினை உருவாக்க நினைத்தார்கள். லைப்ரரிஇயில் இருக்கும் புக்ஸ் மாறும் டாகுமெண்ட்ஸை தேட உருவாக்கப்பட்ட இந்த சர்ச் என்ஜின் இன்று ஆன்லைன் உலகில் பல கோடி மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரபல முன்னணி சர்ச் இன்ஜினாக வளர்ந்துள்ளது.

டூடுல் வெளியிட்டு கொண்டாடும் கூகுள்


லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின்ஆகிய இருவருடனும் இணைந்து கூகுளை முழுமையான சர்ச் என்ஜினாக ப்ரோக்ராம் செய்தவர் ஸ்காட் ஹசன் என்பவர் ஆவார். எனினும் கூகுள் ஒரு நிறுவனமாக துவங்கப்படுவதற்கு முன்பே இந்த ப்ராஜெக்டிலிருந்து ஸ்காட் வெளியேறி ரோபாட்டிக்ஸ் துறைக்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கூகுள் நிறுவர்கள் பெயர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக கூகுள் அறக்கட்டளை (Google's foundation) கடந்த 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1998-ஆம் செப்டம்பர் 27 அன்று அதிகாரப்பூர்வமாக ஒரு நிறுவனமாக நிறுவப்பட்டது. இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாக கூகுள் நிறுவனம் செப்டம்பர் 4-ம் தேதி துவங்கப்பட்டதால், கூகுள் நிறுவனம் துவக்கப்பட்டு முதல் 7 ஆண்டுகளுக்கு அந்நிறுவனத்தின் பிறந்தநாள் செப்டம்பர் 4-ம் தேதியே கொண்டாடப்பட்டு வந்தது.

இருப்பினும் பிற்பாடு கூகுள் நிறுவனம் தனது பிறந்தநாள் கொண்டாட்டத் தேதியை செப்டம்பர் 27 -க்கு மாற்ற முடிவு செய்தது. ஆல்ஃபாபெட் இன்க்-ன் (Alphabet Inc) முழு சொந்தமான துணை நிறுவனமாக கூகுள் 2015-ல் மறுசீரமைக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி கூகுள் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மொழிகளில் தேடல்களை (searches) இயக்கி வருகிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!