நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சீனாவில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட இலையுதிர்கால திருவிழா - படங்கள்

 சீனாவில் இலையுதிர் காலம் மற்றும் அறுவடைத் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன.

சீன நிலவு நாற்காட்டியின் 8வது மாதத்தில் வரும் 15வது நாளை இலையுதிர் கால திருவிழாவாக சீனர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரிந்த குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் ஒன்று சேர்வதை கொண்டாடும் வகையில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டின் திருவிழா செவ்வாயன்று நடைபெற்றது. திருவிழா நிகழ்வுகளை அந்நாட்டு ஊடக குழு ஒளிபரப்பியது. வழக்கமான உற்சாகத்துடன் சீன பாரம்பரிய பாடல்கள் ஒலித்தன. சீன இசைக் கலைஞர்கள் பாரம்பரிய இசையை இசைக்க, நாடகங்களையும் கலைஞர்கள் அரங்கேற்றினர்.
அறுவடை திருவிழாவாகவும் கருதப்படும் இதில், சீனாவின் 100 பிரபலங்கள் பங்கேற்று the rising moon என்ற பாடலை பாடினர். அப்போது பின்னணியில் வாணவேடிக்கை இரவை பகலாக்கியது.

ஒலிம்பிக், விண்வெளி ஆகியவற்றில் சீனா நிகழ்த்தியுள்ள சாதனைகளை குறிக்கும் வகையில் வண்ணமயமான லேசர் உதவியுடன் கூடிய நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

தெற்கு சீனாவில் உள்ள ஷென்ஷென் நகரமே விழாக்கோலம் பூண்டது. பாரம்பரியம் மாறாத பழமையான இசைக்கருவிகளுடன் தொழிற்நுட்பத்தையும் புகுத்தி கோலாகல கொண்டாட்டங்களில் சீனர்கள் ஈடுபட்டனர். ஏராளமான டிரோன்களை பயன்படுத்தி முயல் போன்ற வடிவமும் ஏற்படுத்தப்பட்டது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!