நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிலந்தியைப் போல் சுவற்றில் ஏறி அசத்தும் Spider Girl..!!

 ஸ்பைடர் மேன் (Spider Man) போல சுவர் ஏறும் சிறுமியின் வியக்க வைக்கும் திறமை இணையத்தை கலக்கி வருகிறது.


ஸ்பைடர் மேன் (Spider Man) போல சுவர் ஏறும் சிறுமியின் வியக்க வைக்கும் திறமை இணையத்தை கலக்கி வருகிறது

வியக்க வைக்கும் அந்த பெண் தனது கைகளையும் கால்களையும் லாவகமாக பயன்படுத்தி, சிரமமின்றி தனது வீட்டில் உள்ள உயரமான சுவரை எந்த வித கருவி அல்லது சாதனத்தின் உதவியின்றி மட மடவென்று ஏறுகிறார்

ஒரு சிறுமி சிலந்தி போல சுவரில் ஏறும் வீடியோ வைரலாகி சமூக வலைதள பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில், சுமார் 5 வயதுடைய பெண், எந்த வித உதவியும், பிடிப்பும் இல்லாமல் நிமிடங்களில் சிரமமின்றி சுவர்களில் வேகமாக சுவற்றில் ஏறுகிறாள். அவள் மிக லாவகமாக ஏறும் திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோவில், அவள் முதலில் ஒரு அறையின் மூலையில் நின்று தன் கைகளையும் கால்களையும் இரண்டு சுவர்களுக்கு எதிராக வைத்த்துக் கொள்வதை பார்க்க முடிகிறது. பின்னர் அவள் இரண்டு சுவர்களுக்கு இடையில் நின்று கொண்டு, பின் அரையின் கூரைப் பகிதி வரை எளிதாக மேலே செல்வதைக் வீடொயோவில் காணலாம். மேலும், சுவரின் உச்சியை அடைந்ததும், அவள் தன் இரண்டு கால்களையும் விரித்து, சுகமாக ஆட்டிக் கொண்டிருப்பதையும் காணலாம். 

சிறுமியின் இந்த வியப்பூட்டும் செயலை வீட்டில் இருந்த குடும்பத்தினர் கேமராவில் படம் பிடித்தனர். பின்னர், இந்த வீடியோ ட்விட்டரில் பலரால பகிரப்பட்டது. , ‘Spidergirl’என்ற தலைப்பில் இதனை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோவை இங்கே காணலாம்:

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!