நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

'விவாகரத்திற்கு' கிராண்ட் பார்டி கொடுத்த வினோத பெண்

 நாம் திருமணத்திற்கான பார்டி குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், விவாகரத்தை பார்டி கொடுத்து கொண்டாடிய விந்தை சம்பவம் மிகவும் வைரலாகியுள்ளது.  


லண்டன்: நாம் திருமணத்திற்கான பார்டி குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், விவாகரத்தை பார்டி கொடுத்து கொண்டாடிய விந்தை சம்பவம் மிகவும் வைரலாகியுள்ளது.

சோனியா குப்தா தனது இங்கிலாந்து இல்லத்தில் ஒரு ஆடம்பரமான விருந்தை ஏற்பாடு செய்தார். 45 வயது பெண்மணியான் இவர் தனது 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததை நினைத்து, வருத்தப்படவில்லை. மாறாக இப்போது சுதந்திரமாக மகிழ்ச்சியாக உள்ளதாக கூறியுள்ளார்.  இதற்காக  ஒரு விவாகரத்து விருந்தை மிக ஆடம்பரமாக வழங்கியுள்ளர்.  

இந்த விவாகரத்து வழக்கு 3 வருடங்களாக நீடித்த நிலையில், தற்போது முடிவுக்கு வந்தததில் மிகவும் நிம்மதியாக உணர்கிறார். பார்ட்டியில் அவர் மிகவும் சந்தோஷமாக வலம் வந்தது, அவர் இவ்வாளவு நாளாக எவ்வளவு மன உளைச்சலை சந்தித்திருப்பார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.  விவாகரத்தை கொண்டாட தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து விருந்து அளித்தார்.  

விருந்தில்,  ‘finally divorced’ என்ற பொறிக்கப்பட்ட பேண்டை அணிந்து கொண்டு வலம் வந்தது பலரை ஆச்சரிய படுத்தியுள்ளது.  

விருந்தில் அவர் கூறியவை: "நான் மிகவும் சந்தோஷமான குதூகலமான நபர் என்பதால்,  விருந்திற்கான தீ கரை பிரகாசமான கலராக வைத்துள்ளேன். கடந்த 17 ஆண்டுகளாக மிகவும் மன உளைச்சலில் இருந்த எனக்கு, எனது குதூகலத்தை திருப்பித் தந்த நாள் என்பதால், இதனை கொண்டாட நினைக்கிறேன்” என்றார்.   

ஆடம்பரமான விருந்தில், பல விதமான உணவு வகைகளும், ஆட்டமும், பாட்டமும் தூள் பறந்தது. கொண்டாட்டத்திற்கும் குறைவில்லை. இந்தியாவை சேர்ந்த சோனியா 2003 இல் திருமணம் செய்து கொண்டு, இங்கிலாந்து சென்றார். இருப்பினும், இவருக்கும் சிறிது கூட ஒத்து வராத காரணத்தினால், அவர் மகிழ்ச்சியாக இல்லை.  

"நான் மீண்டும் நானாகவே இருக்க விரும்பினேன்; என் திருமணத்திற்கு முன்பு, நான் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் குதூகலாமன நபராக இருந்தேன், நான் திருமணம் செய்த பிறகு, வாழ்க்கை நரகமானது. நான் என் குடும்பத்தினரிடம் நான் விவாகரத்து செய்ய வேண்டும் என்று சொன்னபோது, அவர்களும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இல்லை. ஆனால் எனக்கு விவாகரத்து கிடைக்க எனது நம்பர்கள் பெரிதும் உதவினர் என்றார். 



also read : தினமும் குளிக்காத மனைவியை விவகாரத்து செய்யத் துடிக்கும் கணவன்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்