நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

7 ஆண்டுகளை நிறைவு செய்து மங்கள்யான் விண்கலம் சாதனை

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம், சுற்றுவட்டப் பாதையில் ஏழு ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்து எட்டாவது ஆண்டில் நுழைந்து உள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' சார்பில் 2013ம் ஆண்டு, நவ., 5ம் தேதி, மங்கள்யான் என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது, 2014 செப்., 24 முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது.இந்த விண்கலம் ஆறு மாதங்கள் மட்டுமே இயங்கும் என முதலில் கணிக்கப்பட்டிருந்தது. எனினும், சுற்றுவட்டப் பாதையில் ஏழு ஆண்டுகள் தன் பயணத்தை நிறைவு செய்து, எட்டாவது ஆண்டில் மங்கள்யான் விண்கலம் அடி எடுத்து வைத்துள்ளது.

இது குறித்து, மங்கள்யான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் விண்கலம் சுற்றி வந்து ஆராய்ச்சி மேற்கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. அதன் செயல்திறன் நன்றாகவே உள்ளது. அடுத்த ஒரு ஆண்டிற்கு இந்த விண்கலம் நன்றாக இயங்கும் என எதிர்பார்க்கிறேன்.இந்த விண்கலம் வாயிலாக செவ்வாய் கிரகம் குறித்த பல தரவுகளை இஸ்ரோ சேகரித்து வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்ள இது உதவி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், மங்கள்யான் திட்டக் குழுவை தலைமை தாங்கி வழிநடத்தியவருமான ராதாகிருஷ்ணன் கூறுகையில், “உண்மையில், எனக்கு திருப்திகரமான உணர்வை அளித்துள்ளது,” என, நெகிழ்ச்சியுடன் கூறினார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!