புடவை அணிந்து வந்ததால் அனுமதி இல்லையா? டெல்லி பெண்ணின் குற்றசாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல்!
- Get link
- X
- Other Apps
ஹோட்டலில் பணியாற்றும் நிர்வாகியை கை நீட்டி அறைந்ததோடு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அந்த விருந்தினர் என ஹோட்டல் தரப்பில் விளக்கம்.
டெல்லி அக்குய்லா உணவகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட சென்ற தனக்கு புடவை கட்டியிருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது என்று ஊடகவியலாளர் அனிதா சௌத்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டு, இந்திய ஆடையான புடவை ஸ்மார்ட்டான ஆடையாக இல்லை என்பதால் அக்குய்லா உணவகத்தில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஸ்மார்ட்டான ஆடைக்கான சரியான வரைமுறை என்ன என்பதை நீங்க கூறினால் இனி நான் புடவை அணிவதையே நிறுத்திவிடுகிறேன் என்று ட்வீட் செய்து அதில் அமித் ஷா, டெல்லி காவல்துறையினர், தேசிய பெண்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களை டேக் செய்திருந்தார்.
அந்த 16 நொடி வீடியோவில், அந்த உணவகத்தில் பணியாற்றும் பெண் ஒருவர், “நாங்கள் ஸ்மார்ட் கேஷூவல்கள் அணிந்திருக்கும் நபர்களை மட்டுமே உள்ளே விடுவோம். புடவை ஸ்மார்ட் கேஷூவல்களாக கருதப்படுவதில்லை” என்று கூறிவிட்டு உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்திய பாரம்பரிய ஆடையை எப்படி கேஷூவல் ஆடை இல்லை என்று கூறலாம் என்றும் , அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
நேற்று இரவு வரை இந்த ட்வீட்டிற்கு எந்தவிதமான எதிர் தரப்பு விளக்கங்கள் எதையும் முன்வைக்காத அக்குய்லா, நேற்று இரவு இன்ஸ்டகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
நாங்கள் இந்த நொடி வரை மௌனமாக தான் இருந்தோம். இருக்கின்றோம். ஆனால் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்திகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த பதிவை வெளியிடுகிறோம். முதலில் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்த அந்த பெண், ஹோட்டலில் உணவு அருந்த முன்பதிவு ஏதும் செய்யவில்லை. முன்பதிவு செய்யாமல் வந்த அவரை சிறிது நேரம் பொறுமையாக இருக்க வேண்டிக் கொண்டோம். அவர்களை எங்கே அமர்த்துவது என்பது தொடர்பாக நாங்கள் ஒரு ஆலோசனையில் ஈடுபட்டோம். ஆனால் அந்த பெண்மணி காத்திருக்க விரும்பாமல், அவர்கள் உணவகத்திற்கு வந்து சண்டையில் ஈடுபட்டோதோடு அல்லாமல் எங்கள் நிர்வாகத்தில் பணியாற்றும் நபர் ஒருவரை கைநீட்டி அறைந்துள்ளார். அந்த நிலைமை மேலும் மோசமாக போய்விடக் கூடாது என்பதற்காகவே எங்கள் கேட் மேனஜெர் ஒருவர் ஆடை குறித்து கூறி அவர்களை அங்கிருந்து வெளியே போகுமாறு தெரிவித்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விவாதத்தின் 10 நொடி காட்சிகளை மட்டுமே அவர் பதிவிட்டிருக்கிறார்.
அந்த நபர் எங்கள் ஊழியரை கை நீட்டி அறையும் காட்சியும், அக்குய்லா எப்போதும் புடவை அணிந்து வரும் விருந்தினர்களை திருப்பி அனுப்பியதில்லை என்பதற்கான ஆதாரங்களையும் இணைத்தே வெளியிடுகிறோம் என்றும் கூறி வீடியோக்களை வெளியிட்டுள்ளது அந்த உணவகம்.
ALSO READ : தினமும் குளிக்காத மனைவியை விவகாரத்து செய்யத் துடிக்கும் கணவன்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment