தினமும் குளிக்காத மனைவியை விவகாரத்து செய்யத் துடிக்கும் கணவன்
- Get link
- X
- Other Apps
குளிக்காத மனைவியை விவகாரத்து செய்ய விரும்பும் கணவன், விவாகரத்து கொடுக்க மறுக்கும் மனைவி! இதற்கு ஆலோசனை வழங்கும் போலீசார்...
அலிகர் மகளிர் பாதுகாப்புப் பிரிவினருக்கு விநோதமான புகார் ஒன்று வந்துள்ளது. கணவர் தன்னை விவகாரத்து செய்வதில் இருந்து தடுக்க வேண்டும் என மனைவி புகார் அளித்தார். அப்போதுதான் கணவன் விவாகரத்து கோரும் காரணம் தெரிய வந்தது.
ஒரு வினோதமான விவாகரத்து வழக்கு இது. உத்தரபிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆண் தனது மனைவியை தினமும் குளிக்கவில்லை என்பதால் விவாகரத்து கோரினார். திருமணம் மற்றும் உறவை காப்பாற்றுவதற்காக மகளிர் பாதுகாப்புப் பிரிவினர் தம்பதிகள் இருவருக்கும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
“தான் தினமும் குளிப்பதில்லை என்பதற்காக கணவர் தனக்கு முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்வதாக மனைவி எழுத்துப்பூர்வ புகார் அளித்தார். தம்பதியினருக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குகிறோம்” என்று அலிகார் மகளிர் பாதுகாப்பு மையத்தில் பணிபுரியும் ஒரு ஆலோசகர் தெரிவித்தார்.
தனது கணவருடன் திருமண உறவைத் தொடர விரும்புவதாக மனைவி உறுதிப்படுத்தியதாக ஆலோசகர் மேலும் கூறினார். உத்தரப்பிரதேசத்தின் குவர்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மனைவி. கணவர் சந்தாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு தான், இருவருக்கும் திருமணம் முடிந்திருக்கிறது. தம்பதிகளுக்கு, ஒரு வயது குழந்தையும் உள்ளது.
மனைவி திருமண பந்தத்தை தொடர விரும்பினாலும், கணவர் திருமண முறிவையே விரும்புகிறார். ஆலோசனையின் போது, கணவர் திருமணத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக தொடர்ந்து வலியுறுத்துகிறார். தினமும் குளிக்காத மனைவியிடமிருந்து விவாகரத்து வாங்கித் தாருங்கள் என்று எங்களுக்கு ஒரு விண்ணப்பத்தையும் கொடுத்தார்.
தனது மனைவியைக் குளிக்கச் சொன்ன பிறகு நாள்தோறும் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு தொடங்கியதாக கூறினார், இதையும் அவர் எழுத்துபூர்வமாக மகளிர் பாதுகாப்புப் பிரிவிடம் கொடுத்திருக்கிறார்.
"இது ஒரு சிறிய பிரச்சினை எனவே தீர்க்க முடியும் என்பதால் அவரது மனைவியுடனான திருமணத்தை முறித்துக் கொள்ள வேண்டாம் என்று அந்த கணவருக்கு ஆலோசனை வழங்க முயற்சிக்கிறோம். அவர்களின் விவாகரத்து அவர்களின் குழந்தையின் வளர்ப்பையும் பாதிக்கும் என்பதை அவருக்கு புரிய வைக்க முயற்சிக்கிறோம்,” என்று ஆலோசகர் கூறினார்.
கணவர் மற்றும் மனைவியின் தரப்பினருக்கு திருமணம் தொடர்பான முடிவுகளை எடுக்க செல் அனுமதி அளித்துள்ளது. மகளிர் பாதுகாப்பு பிரிவின் கூற்றுப்படி, முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்ய முயன்றதன் அடிப்படையில் தான் மனைவி புகார் அளித்துள்ளார்.
ஆனால் உண்மையான காரணம், வன்முறைச் சட்டம் அல்லது பெண்களுக்கு எதிரான குற்றம் என்ற பிரிவின் கீழ் வராது, எனவே மனைவியின் மனுவை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
also read : ஆன்லைனில் ₹10 கோடிக்கு ஏலம் போன ஒரு ரூபாய் காயின்..!!!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment