நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இதுவும் “Couple Goals”... மணக்கோலத்தில் மேடையிலேயே புஷ்-அப்ஸ் செய்து அசத்திய ஜோடி! வைரல் வீடியோ

 புதுமண தம்பதியின் couple goals மட்டுமல்லாமல் ஃபிட்னஸ் இலக்குகளையும் அறிவுறுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.


திருமண ஜோடியின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏன் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன், ஒரு திருமண வீடியோவிலிருந்து நீங்கள் பொதுவாக என்ன எதிர்பார்ப்பீர்கள்? சடங்குகள்? நடனம்? நண்பர்கள் மற்றும் குடும்பம்? அல்லது மணமகனும், மணமகளும் திருமண மேடையில் ஒன்றாக புஷ்-அப் செய்வதா? ஆம், நீங்கள் வாசித்தது சரிதான்.

வடமாநிலத்தில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகனும், மணமகளும் ஒன்றாக இணைந்து மேடையில் புஷ்-அப்ஸ் செய்வது பார்ப்போரை “ஓ இதுவும் couple goalsதான் பா“ என்று சொல்ல வைக்கிறது. இருவரும்  ஜிம் பயிற்சியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை மணமகள் அக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் வைரலான “பச்பன் கா பியார்” என்ற ஹிந்தி பாடல் பின்னணியில் ஒலிக்க, மண ஜோடிகள் புஷ்-அப்ஸ் செய்வது நெட்டிசன்களை குஷிப்படுத்தியுள்ளது. நேற்று பதிவிடப்பட்ட இந்த வீடியோ 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து, 2,700க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.


இந்த புதுமண தம்பதியின் couple goals மட்டுமல்லாமல் ஃபிட்னஸ் இலக்குகளையும் அறிவுறுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். நெட்டிசன்களுள் சிலர், நகைச்சுவையாக, “உங்கள் லெஹங்காவின் எடை உங்கள் உடல் எடைக்கே சமமானது. எனவே, நீங்கள்தான் நிச்சயமாக வென்றிருக்க வேண்டும்” என்றனர்.



இது போன்ற வீடியோக்கள் வைரலாவது மட்டுமின்றி, உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்