ஜொலிஜொலிக்கும் வைரத்தின் வியக்கவைக்கும் பிண்ணனி!
- Get link
- X
- Other Apps
பண்டைய காலங்களில் வைரம் என்பது தேவதைகளின் கண்ணீர் என்றும் இறந்து போகும் நட்சத்திரம் என்றும் நினைத்தனர்.
நமது பூமி தோன்றி கிட்டத்தட்ட 440 கோடி வருடங்கள் இருக்கும். அப்படியானால் இந்த உலகத்தில் உள்ள வைரம் தோன்றி 100 முதல் 330 கோடி வருடங்கள் வரை ஆகியிருக்க வேண்டும். பூமி உருவானதில் இருந்து வைரம் தோன்றியிருக்க வேண்டும் என்றே பலரும் கூறுகின்றனர். பண்டைய காலங்களில் வைரம் என்பது தேவதைகளின் கண்ணீர் என்றும் இறந்து போகும் நட்சத்திரம் என்றும் நினைத்தனர்.1400 காலகட்டம் வரை இந்தியா தான் வைரத்தை ஏற்றுமதி செய்வதில் முதலிடம் வகித்தது.
1700 பிரேசில் முதல் இடத்தை பிடித்தது. பின்னர் 1800 தென்னாப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்தது. அந்த நாட்டில் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட வைரத்தின் பெயர் யுரேகா வைரம். இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இதன் தேவை அதிகரிக்கிறது. இதற்காக விளம்பரங்கள் பல செய்ய தொடங்கினர். இந்தியாவில் வைரம் என்பது நான்காவது நூற்றாண்டிலிருந்து இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றது. அதற்கு முன்பே நாம் வைரம், வைடூரியம் போன்றவற்றைப் பயன்படுத்தியதற்கான ஆதாரமாக சங்க இலக்கியங்கள் பல இருக்கின்றது. ஆனால் 1867-ம் வருடம் தான் வைரத்தின் மற்றொரு அத்தியாயமாக அமைந்தது இதைத் தொடங்கி வைத்தது எராஸ்மஸ் ஜேக்கப் எனும் 15 வயது சிறுவன். இவர் ஆரஞ்ச் நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது விளையாடுவதற்காக சில கற்களை நதியோரத்தில் இருந்து எடுத்துள்ளார். அதில் ஒன்று மட்டும் மிகவும் பிரகாசமாக ஜோலித்து கொண்டிருந்தது.அதையும் தனது வீட்டிற்கு எடுத்து சென்றார்.
ஜேக்கப் கொண்டு சென்ற கற்களை வைத்து இவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் இருந்தவர் இந்த ஜொலிக்கும் கல்லை பார்த்து ஆச்சர்யமடைந்தார்.இது சாதாரண கல்லாக இருக்காது என நினைத்துக்கொண்டு ஜேக்கப்பின் பெற்றோரிடம் சென்று அந்த ஒரு கல்லை மட்டும் எனக்கு தர முடியுமா? என கேட்டுள்ளார். அவர்களும் வெறும் கல் தானே எடுத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளனர். அந்தக் கல்லுக்கு பணம் தருவதாக கூறிய பின்னரும் எதுவும் வேண்டாம் கல்லை எடுத்துச் செல்லுங்கள் என அவர்கள் கூறியுள்ளனர். இந்த கல்லை வாங்கி சென்றவர் தான் 'நீக்கர்'. இது பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள தபால் மூலமாக வில்லியம் என்ற ஆராய்ச்சியாளருக்கு அனுப்பிவைத்தார். வில்லியம் அவர்கள் அந்தக் கல்லை ஆய்வு செய்ததில் அது 21.24 கேரட் வைரம் என்பதை கண்டறிந்து இதுகுறித்த தகவலை நீக்கரிடம் கூறியதோடு எங்கிருந்து இந்த கல் கிடைத்தது என்றும் கேட்டுள்ளார்.
இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த நீக்கர் மீண்டும் சிறுவனின் வீட்டிற்கு சென்று அந்தக் கல் எந்த இடத்தில் கிடைத்தது என்று கேட்கிறார்.அவர் அதற்கு ஆற்றின் கரையோரத்தில் இருந்து எடுத்ததாக கூறியுள்ளார். இதன்பிறகு அந்தப் பகுதியிலிருந்து வைரங்கள் கிடைக்கும் என பல தகவல்கள் பரவத்தொடங்கியது. சரியாக மூன்று வருடம் 1870-ம் ஆண்டு இதே தென்னாப்பிரிக்காவில் 17 வயதான 'செசில் ரோட்ஸ்' என்பவரும் வைரம் தேடுதலில் ஈடுபடுகிறார். ஏராளமான விவசாயிகள் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது 'டீ பீர்ஸ்' சகோதரர்கள் இருவரின் நிலத்தில் வைரம் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டு வர தங்கள் பணியை சரியாக செய்ய முடியாத சகோதரர்கள் இருவரும் அந்த நிலத்தை செசில் ரோட்ஸிடம் விற்று விடுகின்றனர். அதன்பிறகு செசில் ரோட்ஸ் தான் அந்த இடத்தில் டீ பீர்ஸ் எனும் சுரங்கப்பாதை அமைக்கிறார். அந்த இடத்தில் ஏராளமான வைரங்கள் கண்டெடுக்கப்பட்டது.
1880 முதல் 1890 வரை ஏராளமானோர் வைரத்தை தேடி அந்த இடத்திற்கு சென்றதால் 'GREAT KIMBERLY DIAMOND RUSH' என அழைத்தார்கள்.இதனால் பூமியில் மிகப்பெரிய குழி தோண்டப்பட்டது. இதனை இன்று வரை உலக நாடுகள் மிகவும் அதிசயமாக பார்க்கிறது. காரணம் மனிதர்களால் தோண்டப்பட்ட மிக ஆழமான குழி என்றால் அது இதுதான். 1890 களில் தென்னாப்பிரிக்காவிலிருந்து மட்டும் 90 சதவீத வைரங்கள் எடுக்கப்பட்டது. இரண்டாயிரம் வருடங்கள் இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட வைரத்தின் அளவுகளை விட 10 முதல் 20 வருடங்களில் தென்னாப்பிரிக்காவில் இருந்து எடுக்கப்பட்ட வைரங்களின் அளவு அதிகம் என்று கூறலாம். இந்த வைரத்தை எடுப்பதற்கு ஏராளமானோர் திரண்டதால் அவர்களை ஒன்றிணைக்க 'THE DIAMOND SYNDICATE' எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்கா அந்த காலத்தில் பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்ததால் அந்த அரசாங்கம் தான் இந்த அமைப்பை உருவாக்கியது. இது உருவாக முக்கிய காரணமாக அமைந்தது செசில் ரோட்ஸ் தான். இவர்தான் சகோதரர்களிடம் இருந்த நிலத்தை விலைக்கு வாங்கியதோடு விவசாயிகளின் நிலத்தையும் வாங்கினார்.
அதோடு டைமண்ட் சிண்டிகேட் என்ற அமைப்பையும் உருவாக்கினார். ஆனால் பலரும் வைரம் எனக்கு வேண்டும் என தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்ளத் தொடங்கினார். அப்போது செசில் ரோட்ஸ் கூறியதாவது, "நீங்க இப்படி போட்டி போட்டுக் கொண்டால் வைரத்தின் மதிப்பு குறைந்துவிடும். எனவே கிடைக்கும் வைரத்தை என்னிடம் கொண்டு வாருங்கள். நாம் ஒன்றாக இணைந்து விலையை நிர்ணயம் செய்யலாம். உலகத்தில் வைரத்திற்கு மிகப்பெரிய அளவில் மதிப்பு இருக்கிறது. எனவே நாம் கிடைக்கும் வைரத்தை பணமாக மாற்றலாம்" என கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்டு அனைவரும் வைரங்களை டீ பீர்ஸ் நிறுவனத்திடம் சென்று கொடுக்க அவர்கள் குறைந்த விலையில் வாங்கி சேமித்து வைத்துக் கொண்டனர்.
1939-ம் ஆண்டு டீ பீர்ஸ் நிறுவனம் 4C என்பதை அறிமுகப்படுத்தினர். அதாவது Colour, Carat Weight, Clarity மற்றும் Cut என்பதுதான் அது.இந்த நான்கும் தான் வைரத்தின் முக்கியமான பண்பு எனக் கூறி மக்களை நம்ப வைத்தனர். 1927இல் டீ பீர்ஸ் நிறுவனத்தின் 40 சதவீத பங்கை ஏர்னஸ்ட் என்பவர் வாங்குகிறார். இவர் ஏற்கனவே ஆங்கிலோ அமெரிக்கன் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தை வைத்திருந்தார். இவரது கைக்கு டீ பீர்ஸ் நிறுவனம் சென்றவடன் உலகத்தில் எந்த இடத்தில் வைரம் கிடைத்தாலும் அது இங்குதான் கொண்டுவரவேண்டும் எனக் கூறினார். ஒரு கட்டத்தில் வைரத்தின் மீது இருந்த ஈடுபாடு மக்களுக்கு குறைந்துவிடுகிறது. முதல் உலகப்போர் வந்தபோது வைரத்தை யாரும் மதிக்கவில்லை. காலங்கள் கடந்த பிறகு டீ பீர்ஸ் நிறுவனம் ஏர்னஸ்ட் மகன் ஹென்றியிடம் செல்கிறது. 1938ல் யாரும் வைரத்தை வாங்க முன் வரவில்லையே என்று யோசித்த ஹென்றி விளம்பர நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போட்டு அமெரிக்கர்களை வைரத்தை வாங்க வைக்க வேண்டும் என முடிவு செய்தார். இதனால் விளம்பரத்தில் வைரம் பதித்த ஒரு மோதிரத்தை மணமகன் மணமகளுக்கு கொடுக்கும் போது வைரத்தின் அளவு எந்த அளவிற்கு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மணமகனின் காதல் பெரியது எனக் கூறும் படியான விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது. இதை பார்த்த பெண்கள் எனக்கும் வைர மோதிரம் வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினர். அதே நேரம் இதனை பார்த்த ஆண்கள் எனது காதல் பெரிது என்பதை நிரூபிக்க பெரிய வைரக்கல் பதித்த மோதிரங்கள் வாங்க வேண்டும் என நினைத்தனர்.
ஒரு கட்டத்தில் அமெரிக்கர்கள் வைர மோதிரம் என்பதை திருமணத்தில் இன்றியமையாத ஒன்றாக நினைக்கத் தொடங்கினர். ஆனால் இந்த விளம்பரம் ஜப்பானையும் தாக்கியது. அமெரிக்காவைப் போல் ஜப்பானில் திருமணங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. ஆனாலும் இந்த விளம்பரத்தின் யுக்தி ஜப்பானிலும் விளையாடத் தொடங்கியது. அதாவது மேற்கத்திய நாடுகளில் மட்டும்தான் வைரத்தை உபயோகிப்பார்களா? ஜப்பான் மக்கள் உபயோகிக்கக் கூடாதா? என்பது போன்ற விளம்பரங்களை வெளியிட்டனர். எனவே ஜப்பானில் 6 சதவீத மக்கள் வைரத்தை பயன்படுத்தினர். ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு 60 சதவீத மக்கள் வைரத்தை உபயோகிக்க தொடங்கினார். அந்த அளவிற்கு விளம்பரம் மக்கள் மத்தியில் பிரதிபலித்தது. வைரத்தின் ஏற்றுமதி விற்பனை என அனைத்தையும் டீ பீர்ஸ் நிறுவனம் தான் பார்த்துக் கொள்வதால் லாபம் அனைத்தும் இந்த நிறுவனத்திற்கு சேர்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மூன்று டன் வைரத்தையும் பிற நாடுகளுக்கு விற்கிறார்கள். ஆனால் லாபம் தென்னாப்பிரிக்காவிற்கு செல்லாமல் டீ பீர்ஸ் நிறுவனத்திற்கு செல்கிறது. 1950ஆம் ஆண்டு இந்த நிறுவனத்திற்கு ஒரு செய்தி வருகிறது.
அது செர்பியா நாட்டிலும் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு கிடைக்கும் வைரம் மிகவும் சிறியதாக இருப்பதாகவும், இதனால் மிக விரைவாக மோதிரங்கள் செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த செய்தி டீ பீர்ஸ் நிறுவனத்திற்கு பயத்தைக் கொடுத்தது. ஏனென்றால் செர்பியா நாட்டிலிருந்து வரும் வைரங்கள் நம் மூலமாக மக்களை சென்றடையாது என நினைத்தனர். செர்பியா சோவியத் யூனியன் ரஷ்யாவிற்கு கீழ் இருப்பதால் அங்கிருந்து கிடைக்கும் வைரத்திற்கு பிற நாடுகளிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது. 1950க்குப் பிறகு டீ பீர்ஸ் நிறுவனத்தின் முயற்சிகள் உடைய தொடங்கியது. ஏராளமான நிறுவனங்கள் வைரத்தை வாங்கி விற்க முன் வந்தது. அந்த சமயத்தில் டீ பீர்ஸ் நிறுவனம் எங்கெங்கு வைரங்கள் கண்டுபிடிக்கப்படுகிறதோ அங்கிருக்கும் அரசாங்கத்திற்கு சிறிது பணத்தை கொடுத்து அவர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். எந்த நாட்டில் வைரம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது டீ பீர்ஸ் நிறுவனத்தின் வழியாக தான் செல்ல வேண்டும் என எழுதப்படாத விதியை அமல் படுத்தினார்.
தென்னாப்பிரிக்காவில் கிடைத்த 'யுரேகா' எனும் வைரம் தான் மொத்த உலகத்திற்கும் வைரம் எனும் வியாபாரத்திற்கான திறவுகோலாக மாறியது. ஆனால் இன்றும் தென்னாப்பிரிக்கா ஏழ்மையான நாடாக தான் இருக்கிறது. ஆனால் அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் மூலமாக ஏராளமானோர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். ஜொலிஜொலிக்கும் வைரத்திற்கு பின்னால் இத்தகைய கதை இருக்குமென்றால் உழைப்பாளிகள் தங்கள் உழைப்பை வேறு நபர்களுக்கு கொண்டு செல்ல இடைத்தரகர்களாக செயல்படும் வியாபாரிகள் தான் பெரிய பணக்காரர்களாக மாறுகிறார்கள் என்பது புலப்படுகிறது.
ALSO READ : மாயமும் இல்லை மந்திரமும் இல்லை ... மர்ம கிணற்றின் ரகசியம் உடைந்தது
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment