நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அறுவை சிகிச்சையின்போது அழுதது ஒரு குற்றமா? - அதுக்கும் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை

 Brief emotion என்ற பெயரில் அழுததற்காக தனியாக கட்டணம் வாங்கியிருக்கிறது அந்த மருத்துவமனை நிர்வாகம்.


அறுவை சிகிச்சையின் போது அழுதேன் என்பதற்காக எனக்கு ஒரு தொகையை மருத்துவமனை நிர்வாகம் கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்திருப்பதாக பெண் ஒருவர் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்வைப்பதாக உள்ளது.

பொதுவாக தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல், ஜலதோஷம் என சென்றாலே கட்டண வசூலில் இறங்குவதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுவதுண்டு. அந்தக் கட்டணம், இந்தக் கட்டணம் என்று இஷ்டத்துக்கு பில் போட்டு ஒரு பெரும் தொகையை வசூலித்துவிட்டு தான் அனுப்பி வைப்பார்கள். இந்த குற்றச்சாட்டை உண்மை என நிரூபிக்கும் வகையில் தான் ஒரு சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியிருக்கிறது.

பொதுவாக அறுவை சிகிச்சை என்றாலே பயம் தரக்கூடியதாக தான் இருக்கும். அப்போது மருத்துவர்களிடம் பயத்தில் கையை பிடித்து இழுப்பது, அழுவது, கத்துவது போன்ற செயல்களில் சில நேரங்களில் நோயாளிகள் ஈடுபடுவதுண்டு. அதே போலத்தான் அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மிட்ச் என்ற பெண்மணி ஒருவர் மச்சத்தை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சைக்கு முன்னர் எமோஷனலாக இருந்துள்ளார். அவர் உணர்ச்சிவசப்பட்டு பயத்தில் அழுதிருக்கிறார். இதெல்லாம் சகஜம் என்ற நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் தரப்பட்ட பில்லை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.


அறுவை சிகிச்சையின் போது அழுததற்காக அவருக்கு பில் தொகை தனியாக வந்திருந்ததால் தான் அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். Brief emotion என்ற பெயரில் அழுததற்காக பில்லாக 11 டாலர்கள் பில் தொகை மருத்துவமனை கட்டண ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மச்சத்தை அகற்றுவதற்கு 223 டாலர்களும், அப்போது அழுததற்காக 11 டாலர்களும் கட்டணம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மருத்துவமனை தனக்கு அளித்த பில் கட்டண ரசீதை மிட்ச், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த அழுகை கட்டண விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்