நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Skin Care tips: சிறந்த பலன கிடைக்க கிளிசரினை பயன்படுத்தும் சரியான முறை..!!

 சருமத்தில் கிளிசரின்  எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதனை தெரிந்து கொண்டால் கிளிசரினின் நன்மைகளை முழுமையாக பெறலாம்.

அழகிய முகம் மற்றும் சிறந்த தோற்றம் கிடைக்க சருமம் மிகவும் முக்கியம். சரும பராமரிப்பு  என்பது மிகவும் முக்கியமானது. கிளிசரின் உடலின் முக்கியமாக முக சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. முக பளபளப்பிற்கு, மென்மையான சருமத்திற்கு பலர் கிளிசரினை பயன்படுத்துகின்றனர். 

ஆனால் சருமத்தில் கிளிசரின்  எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதனை தெரிந்து கொண்டால் கிளிசரினின் நன்மைகளை முழுமையாக பெறலாம்.

கிளிசரின் எப்படி தயாரிக்கப்படுகிறது? கிளிசரின் என்றால் என்ன

கிளிசரின் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சரும நிபுணர் டாக்டர் கீதிகா மித்தல் கூறினார்.  கிளீசரின் தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் சர்க்கரையுடன் சேர்த்து புளிக்கவைக்கப்பட்டு செயற்கையாக தயாரிக்கப்படுகிறது. கிளிசரின் நிறமற்ற திரவம், அதில் வாசனை இல்லை. இதனுடன், கிளிசரின் மாய்ஸ்சரைசர், க்ளென்சர் மற்றும் சீரம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

முகத்திற்கு கிளிசரின்:

 கிளிசரினை நீங்கள் முகத்தில் கிளிசரின் தடவ விரும்பினால், இரவில் முதலில் முகத்தை சுத்தம் செய்து துண்டால் ஈரம் போக துடைக்கவும். இதற்குப் பிறகு, அரை கப் தண்ணீரில் சில துளிகள் கிளிசரின் கலக்கவும். இப்போது அந்த தண்ணீரில் ஒரு பருத்தி உருண்டையை நனைத்து தோலில் தடவவும். வாய் அல்லது கண்களுக்கு அருகில் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கிளிசரின் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

கிளிசரின் சாதாரண, வறண்ட மற்றும் எண்ணெய் சருமத்தின் மீது பயன்படுத்தப்படலாம். இது சருமத்தை மென்மையாக்கி பளபளப்பை அளிக்கிறது. இதனுடன், சருமத்தின் நிறமும் மேம்படுகிறது மற்றும் தோல் நோய்களின் ஆபத்து குறைகிறது. மேலும், இது முகத்தில் ஈரப்பதமாக்குவதற்கும், டோனிங் செய்வதற்கும் உதவுகிறது. இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. 


ALSO READ : 40 வயதை தொடும் பெண்களுக்கு உடல் எடையில் கவனம் தேவை… ஏன் தெரியுமா?


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!