நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

₹6 லட்சம் மதிப்பிலான ப்ளூடூத் செருப்பு; வசூல் ராஜா MBBS பாணியில் ஹைடெக் காப்பி.!

 தேர்வில் மோசடிக்கு உதவ ப்ளூடூத் சாதனங்களுடன் இணைக்கப்பட்ட செருப்புகளை அணிந்த 5 பேர் பிகானரில் கைது செய்யப்பட்டனர். 

தேர்வுகளின் போது பிட் அடித்த காலம் போய் விட்டது. இப்போது தொழில்நுட்ப உதவியுடன் ஹை டெக் அளவில் காப்பி அடிப்படுகின்றன. ஒரு சமீபத்திய ஹைடெக் மோசடி வழக்கு, எம்பிபிஎஸ் திரைப்படத்தை உங்களுக்கு நிச்சயம் நினைவூட்டும். தேர்வில் மோசடிக்கு உதவ ப்ளூடூத் சாதனங்களுடன் இணைக்கப்பட்ட செருப்புகளை அணிந்த 5 பேர் பிகானரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் மோசடி குழுவை சேர்ந்தவர்கள். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 6 லட்சம் ரூபாய்க்கு செருப்புகளை வழங்கியுள்ளனர்.

ஆசிரியர்களுக்கான ராஜஸ்தான் தகுதித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் நடைபெற்றது . ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக ஆவதற்கு ஒரு நபர் REET தேர்ச்சி பெற வேண்டும்.16.51 லட்சம் மாணவர்கள் தேர்வுக்காக பதிவு செய்தனர். மோசடி முயற்சிகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஜெய்ப்பூர் உட்பட பல மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் கூட நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், ராஜஸ்தான் (Rajastan) காவல்துறையினர் பல REET மாணவர்களின் செருப்புகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல புளூடூத் சாதனங்களை கைப்பற்றினர். இந்த செருப்புகளில் சிம் கார்டுடன் இணைக்கப்பட்ட சிறிய அழைப்பு சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. கண்களுக்கு புலப்படாத வகையில் மிகச்சிறிய சிறிய புளூடூத்-சாதனம் தேர்வு எழுதுபவர்களின் காதுகளில் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், காவல் துறைனர் சந்தேகத்தின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையில், புளூடூத் கருவி மூலம் தேர்வில் தேர்ச்சி பெற உதவிய குற்றவாளியை கைது செய்தனர். 

6 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட செருப்புகளின் அடிப்பகுதியில் நிறுவப்பட்ட ப்ளூடூத் கருவி மூலம் கேள்வித்தாளில் உள்ள கேள்விகளுக்கு குற்றவாளிகள் உதவி செய்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். புளூடூத் மினி தொலைபேசி மாணவரின் காதில் பொருத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் வெளியில் இருந்து அவருக்கு கேள்விக்காக விடை அளிக்க யாரோ உதவியுள்ளனர். காதில் பொருத்தப்பட்டிருந்த கருவி தோல் நிறத்தில் இருந்ததாலும், அளவில் மிகக்சிரியதாக இருந்ததாலும் கண்களுக்கு புலப்படாத வகையில் இருந்தது.



also read : டி வில்லியர்ஸ் அவுட்டானதும் விரக்தியான மகன்; க்யூட் வீடியோ


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்